என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
- தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்
- தண்ணீர் சாலையில் சென்றதால் நடந்த சம்பவம்
கரூர்:
கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த கீரனுார் சாமிபிள்ளைபுதுாரை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 37). கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியில் வீடு கட்டி வருகிறார். அந்த புது கட்டடத்துக்கு தண்ணீர் ஊற்றியபோது தெருவில் ஓடியது. இதனை பார்த்த அதே ஊரைச்சேர்ந்த இளையராஜா (30), அவரது மனைவி அருள்ஜோதி (30), ஆகியோர் தகாத வார்த்தையில் பேசி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயம் அடைந்த முனியப்பன், கரூர் அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளார். இவர் கொடுத்த புகாரின் பேரில் தோகைமலை போலீசார் இளை யராஜாவை கைது செய்தனர்.
Next Story