என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  குண்டர் சட்டத்தில் 2 பேருக்கு சிறை
  X

  குண்டர் சட்டத்தில் 2 பேருக்கு சிறை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • குண்டர் சட்டத்தில் 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்
  • சிறுமி பாலியல் வழக்கில் கைதானவர்கள்

  கரூர்:

  கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை காவல் நிலைய பகுதியை சேர்ந்த நிலவொளி, திண்டுக்கல் மாவட்ட பகுதியை சேர்ந்த யுவராஜ் ஆகியோர் லாலாப்பேட்டை பகுதியில் ஒரு சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது சம்பந்தமாக பெற்றோர் புகாரின் பேரில், இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட இருவரையும் மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் பரிந்துரையின்படி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப் பித்தார். அதன்படி, திருச்சி மத்திய சிறையில் இருந்த இவர்களை 7ம்தேதி முதல் குண்டர் தடுப்பு காவலில் அடைக்கப்பட்டனர்.

  மேலும், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடும் நபர்கள் மீதும், குழந்தை திருமணம் மற்றும் திருமணத்திற்காக குழந்தைகளை கடத்துவது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  Next Story
  ×