என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தக்கலை அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி
  X

  தக்கலை அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மின் இணைப்பு வயர் செல்லும் இரும்பு தூணை எதிர்பாராத விதமாக பிடித்ததால் மின்சாரம் தாக்கியது.
  • உடல் பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

  கன்னியாகுமரி:

  தக்கலை அருகே உள்ள வெட்டிக்கோணம் நொண்டி மாமூட்டுவிளையை சேர்ந்த சரளாபாய். சம்பவத்தன்று வீட்டின் வெளியே மின் இணைப்பு வயர் செல்லும் இரும்பு தூணை எதிர்பாராத விதமாக பிடித்துள்ளார். இதனால் மின்சாரம் தாக்க தூக்கி வீசி எறியப்பட்டார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே சரளாபாய் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

  சம்பவம் குறித்து அவரது மகன் முருகன் தக்கலை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவின் அடிப்படையில் பயிற்சி எஸ்பி விவேகனந்த சுக்லா விசாரணை நடத்தினார். பின்னர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மூதாட்டியின் உடல் பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

  Next Story
  ×