search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்காலிக ஆசிரியர் நியமனத்தை அரசு கைவிட வேண்டும்
    X

    தற்காலிக ஆசிரியர் நியமனத்தை அரசு கைவிட வேண்டும்

    • நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் மனு
    • தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்திற்கு இடை க்கால தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட் கிழமையான இன்று ஏராள மான பொதுமக்கள் மனு கொடுக்க வந்திருந்தனர். அவர்களை போலீசார் சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதித்தனர் .

    குமரி மாவட்டம் பால பள்ளத்தை சேர்ந்தவர் சுகன்யா ஸ்டீபன். இவரது தலைமையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று பணி கிடைக்காத ஏராளமான பெண்களும் மனு அளித்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து தமிழ கத்தில் 2013-ம் ஆண்டு முதல் தற்போது வரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், சுமார் 9 ஆண்டு காலம் நிரந்தர பணி வேண்டி காத்திருக்கிறார்கள்.

    இந்த நிலையில் தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்தி ற்கான அறிவிப்பு வெளியிட ப்பட்டது. இதை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்தினோம். பின்னர் எங்கள் குழு சார்பில்முதல்-அமைச்சரின் தனிச்செய லாளர், பள்ளிக்கல்வித் துறை ஆணையர் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி னோம். அப்போது அரசிடம் பேசி பரிசீலனை செய்வதாக கூறினார்கள்.

    இதற்கிடையே மதுரை ஐகோர்ட்டு கிளையில் எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்திற்கு இடை க்கால தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் கல்வித்து றையால் தற்போது தற்கா லிக ஆசிரியர் நியமன த்திற்கான திருத்திய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டதோடு தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கோரியும், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கவும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

    இவ்வாறு கோர்ட்டு உத்தரவை மீறி பள்ளிக்கல்வி த்துறை செயல்படுவதால் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி வழங்கப்படாத 30 ஆயிரத்தி ற்கும் மேற்பட்ட ஆசிரியர்க ளின் வாழ்வாதாரம் பறி போகும் நிலை உள்ளது.

    எனவே வழக்கின் இறுதி தீர்ப்பு வரும் வரை தற்கா லிக ஆசிரியர் நியமனத்தை பள்ளிக்கல்வித்துறை கைவிட வேண்டும். மேலும் அரசாணை எண் 149-ஐ உடனடியாக ரத்து செய்து 9 ஆண்டுகளாக உரிய பணியின்றி வாழவழியின்றி தவித்து வரும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற எங்களுக்கு நிரந்தர ஆசிரியர் பணி வழங்க அரசுக்கு பரிந்துரைத்து அறிக்கை அனுப்ப வேண்டுகிறோம். இவ்வாறு அதில் கூறப்ப ட்டுள்ளது.

    Next Story
    ×