என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  குமரி மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
  X

  குமரி மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை
  • இந்த ஆண்டு இதுவரை 44 பேர் குண்டர் சட்டத்தில் கைது

  நாகர்கோவில்:

  குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். கஞ்சா விற்பனை செய்பவர்களின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு வருகிறது.

  கடந்த சில நாட்களில் மட்டும் 250-க்கு மேற்பட்ட கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

  தொடர்ந்து கஞ்சா வியாபாரிகளை போலீசார் கைது செய்து வருகிறார்கள். ஆசாரிபள்ளம் மேல பெருவிளையைச் சேர்ந்த கிறிஸ்துராஜன் (வயது 37) என்பவர் வழக்கில் ஒன்றில் கைது செய்யப்பட்டு ஜெயில் அடைக்கப்பட்டிருந்தார்.

  இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை செய்தார்.

  இதையடுத்து கிறிஸ்துராஜனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டார். இதை யடுத்து கிறிஸ்துராஜன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

  கைது செய்யப்பட்ட கிறிஸ்துராஜன் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டார். இவர் மீது ஏற்கனவே ஆசாரி பள்ளத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது.

  குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 44 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

  Next Story
  ×