search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் பள்ளி வாகனங்கள் 17-ந் தேதி ஆய்வு
    X

    நாகர்கோவிலில் பள்ளி வாகனங்கள் 17-ந் தேதி ஆய்வு

    • வட்டார போக்குவரத்து அலுவலகம் அறிவிப்பு
    • கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது.

    நாகர்கோவில் :

    பள்ளி வாகனங்கள் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மூலம் ஆண்டுக்கு ஒருமுறை தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது.

    இதையடுத்து பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நாளை மறுநாள் ( 17-ந்தேதி ) நாகர்கோவில் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளது.

    இது குறித்து நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அதிகாரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு மோட்டார் வாகன பள்ளி வாகனங்களுக்கான ஒழுங்கு மற்றும் கட்டுப்பாட்டு விதிகள் 2012 - ன்படி வருடத்திற்கு ஒரு முறையாவது அனைத்து பள்ளி வாகனங்களையும் மாவட்ட அளவிலான சிறப்பு குழு பள்ளி வளாகத்தில் ஆய்வு செய்து பொதுச்சாலையில் இயக்க தகுதி வாய்ந்ததாக உள்ளதா என ஆய்வு செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அலுவலக எல்லைக்குட்பட்ட கல்வி நிலையங்கள் தங்கள் பள்ளி வாகனங்களை வருகிற 17-ந்தேதி காலை 10 மணியளவில் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் மேற்பார்வை அலுவலர், குழு உறுப்பினர், சார் ஆட்சியர், நாகர்கோவில் காவல் துணை கண்காணிப்பாளர், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் இயக்க ஊர்தி ஆய்வாளர் முன்னி லையில் தவறாது ஆஜர்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் அனுமதிச்சீட்டின் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×