என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  7-ந் தேதி ராகுல் காந்தி கன்னியாகுமரி வருகை
  X

  7-ந் தேதி ராகுல் காந்தி கன்னியாகுமரி வருகை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பாதுகாப்பு ஏற்பாடு குறித்து கூடுதல் டி.ஜி.பி. நாளை ஆய்வு
  • போலீஸ் அதிகாரிகளிடம் ஆலோசனை

  நாகர்கோவில்:

  12 மாநிலங்களில் பாத யாத்திரை மேற்கொள்ளும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, வருகிற 7-ந் தேதி கன்னியா குமரியில் இருந்து பயணத்தை தொடங்குகிறார். அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் அவர் பங்கே ற்கிறார்.

  இதனை தொடர்ந்து அவர் குமரி மாவட்டத்தில் 4 நாட்கள் நடைபயணம் செல்கிறார். இதையொட்டி அவரது பயண பாதைகளை போலீசார் ஆய்வு செய்து வரு கின்றனர். தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க் குமரி மாவட்டம் வந்து போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மற்றும் போலீஸ் அதிகாரிகளோடு ஆய்வு செய்து பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆலோச னையும் வழங்கினார்.

  இந்த நிலையில் பாது காப்பு தொடர்பாக ஆய்வு நடத்த கூடுதல் டி.ஜி.பி. தாமரைக் கண்ணன் நாளை (6-ந் தேதி) குமரி மாவட்டம் வருகிறார்.

  அவர் பாதயாத்திரை தொடங்கும் கன்னியாகுமரி காந்தி மண்டபம் மற்றும் பொதுக்கூட்டம் நடை பெறும் திடல் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கிறார். தொடர்ந்து போலீஸ் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்துகிறார்.

  Next Story
  ×