search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சர்வதேச யோகா தினத்தையொட்டி வருகிற 21-ந்தேதி இந்தியா முழுவதும் 75 ஆயிரம் இடங்களில் யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது - மத்திய மந்திரி எல். முருகன் தகவல்
    X

    சர்வதேச யோகா தினத்தையொட்டி வருகிற 21-ந்தேதி இந்தியா முழுவதும் 75 ஆயிரம் இடங்களில் யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது - மத்திய மந்திரி எல். முருகன் தகவல்

    • இந்தியாவின் 75-வது சுதந்திரதினத்தை முன்னிட்டு சர்வதேச யோகா தினம் விவேகானந்தா கேந்திர கடற்கரை வளாகத்தில் நடந்தது
    • நடனம், பரதநாட்டியம், சிலம்பாட்டம் ஒயிலாட்டம், உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது

    கன்னியாகுமரி :

    மத்திய மாநில அரசுகள் இணைந்து இந்தியாவின் 75-வது சுதந்திரதினத்தை முன்னிட்டு சர்வதேச யோகா தினம் கன்னியா குமரி விவேகானந்தபு ரத்தில்உள்ள விவேகானந்தா கேந்திர கடற்கரை வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. இதில்மத்திய மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் எல். முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு யோகா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சிக்கு தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஜவஹர் தலைமை தாங்கினார். தேசிய நெடுஞ்சாலை பணி மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி வரவேற்றுப் பேசினார். இதில்குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத், எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ., பெங்களூரு சி.எப்.எஸ். இயக்குனர் அன்னபிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் யோகா பயிற்சி, நடனம், பரதநாட்டியம், சிலம்பாட்டம் ஒயிலாட்டம், உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

    முன்னதாக மத்திய மந்திரி எல்.முருகன் பால்பண்ணை அதிபர்கள் கால்நடை விவசாயிகள் மீனவர்களுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி எல்.முருகன் பேசியதாவது:-

    கடந்த 2014-ம் ஆண்டில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பெரும் முயற்சி யால் ஜூன்21-ந்தேதி உலக யோகா தினமாக அறிவிக்கப்பட்டது. அன்று முதல் அற்புதமான யோகா கலை ஐ.நா. சபையால் உலக யோகா தினமாக ஆண்டுதோறும் ஜூன்

    21-ந்தேதி கடந்த 8 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நமது நாட்டில் இந்த ஆண்டு முழுவதும் 75-வது சுதந்திர பெருவிழாவை கொண்டாடி வரும் வேளையில் உலக யோகா தினத்தை 75 நாட்களுக்கு முன்பே தொடங்கி உள்ளோம்.

    வடக்கே இமயமலை உத்தரகாண்ட் ரிஷிகேஷ் தெற்கு கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இன்றைய தினம் இந்த யோகா தினத்தின் முன்னோடி நிகழ்ச்சியாக யோகா பயிற்சி நடக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறை ரீதியாக யோகா தின நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.அதன் அடிப்படையில் இன்று இங்கு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் உலக யோகா தின விழா நடத்தப்படுகிறது

    யோகா கலை நமது நாட்டில் தோன்றிய அற்புதமான கலை இன்று உலகம் முழுவதும் போற்றக்கூடிய சிறப்பை பெற்றுள்ளது. யோகா மூலமாக எளிமையாக அதிக செலவு செய்யாமல் மனிதன் நோயை கட்டுப்படுத்த முடியும், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மன அழுத்தம் போன்றவற்றை கட்டுப்படுத்த யோகா முக்கிய பங்கு வகிக்கிறது.

    தொடர்ந்து யோகா பயிற்சியும் மூச்சுப் பயிற்சியும் செய்து வந்தால் நாம் ஆரோக்கியமாக இருக்கலாம். நாம் ஆரோக்கியமாக இருந்தால் தேசம் ஆரோக்கியமாக இருக்கும் என்பதற்காகவும் வருங்கால சந்ததியினருக்கும் இந்த யோகா கலை கொண்டு செல்கிறோம். சர்வதேச யோகா தின மான வருகிற 21-ந்தேதி இந்தியா முழுவதும் 75 ஆயிரம் இடங்களில் யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து மத்திய மந்திரி எல்.முருகன் ஏராளமான மாணவர்களுடன் தரையில் அமர்ந்து யோக பயிற்சி செய்தார். இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

    Next Story
    ×