என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மார்த்தாண்டம் அருகே தவறி விழுந்து தொழிலாளி பலி
  X

  மார்த்தாண்டம் அருகே தவறி விழுந்து தொழிலாளி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • குடிபோதையில் கீழே தவறி விழுந்ததால் முகம் மற்றும் நெற்றி ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கன்னியாகுமரி:

  கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட நெல்வேலி வாழவிளை பகுதியை சேர்ந்தவர் சுனில் (வயது40). தொழிலாளி. இவர் 2015-ம் ஆண்டு பாகோடு பகுதியைச் சார்ந்த டெப்லின் சுஜி (24) என்பவரைத் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சுனிலுக்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இவர் பாகோட்டில் உள்ள தனது மனைவியின் வீட்டில் மனைவி பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார்.

  இவர்களுக்குள் அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு மனைவிடம் தகராறில் ஈடுபட்டு நெல்வேலியில் உள்ள தனது தாயார் வீட்டில் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று குடிபோதையில் கீழே தவறி விழுந்துள்ளார். அதில் அவரது முகம் மற்றும் நெற்றி ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×