search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு 2-வது நாளாக காய்ச்சல் சோதனை
    X

    குமரி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு 2-வது நாளாக காய்ச்சல் சோதனை

    • மாவட்டம் முழுவதும் 76 பள்ளிகள் உட்பட 128 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடந்தது.
    • மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் காய்ச்சல் பரிசோதனை முகாமை நடத்த சுகாதாரத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    நாகர்கோவில் :

    தமிழக முழுவதும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்கள் மூலம் காய்ச்சல் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.குமரி மாவட்டத்திலும் சுகாதாரத் துறை அதிகா ரிகள் சிறப்பு முகாம்கள் மூலம் காய்ச்சல் பரிசோ தனை மேற்கொண்டனர். பள்ளிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.நேற்று மாவட்டம் முழுவதும் 76 பள்ளிகள் உட்பட 128 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடந்தது.

    இன்று 2-வது நாளாக பள்ளிகளில் காய்ச்சல் பரிசோதனை சிறப்பு முகாம் நடந்தது.ஒவ்வொரு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியிலுள்ள 6 பள்ளிகளில் இந்த முகாம் நடத்தப்பட்டது.

    மாவட்டம் முழுவதும் 9 ஒன்றியங்களில் உள்ள 54 பள்ளிகளில் இன்று 2-வது நாளாக சுகாதாரத் துறை அதிகாரிகள் மூலமாக சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஒரு சில மாணவர்களுக்கு லேசான காய்ச்சல் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

    அவர்களுக்கு தடுப்பு மாத்திரைகளை டாக்டர்கள் வழங்கினார்கள். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் காய்ச்சல் பரிசோதனை முகாமை நடத்த சுகாதாரத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    இதன் தொடர்ச்சியாக இனி வரும் நாட்களில் இந்த பரிசோதனை முகாம் நடைபெறும் .மேலும் அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு காய்ச்சல் பாதிப்புடன் வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து அதற்கான மாத்திரைகளை நோயாளிகளுக்கு டாக்டர்கள் வழங்கி வருகிறார்கள்.

    காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு சுகாதாரத் துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    Next Story
    ×