என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மருங்கூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
- தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
- கழிவுநீரை வெளியேற்ற உறிஞ்சி குழாய் அமைக்க வேண்டும் என்ற திட்டத்தை கைவிட வலியுறுத்தி மனு
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் பேரூராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை பொது இடத்தில் விடாமல், வீட்டின் வளா கத்திற்குள்ளாகவே உறிஞ்சி குழாய் அமைத்து கழிவு நீரை விட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் பொது மக்களை வலியுறுத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் மருங்கூர் பேரூ ராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஒன்றிய செயலாளர் ஜெசிம் தலைமை தாங்கி னார். பேரூர் செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார்.
இதில் சிறப்பு விருந்தினராக தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் மருங்கூர் பேரூராட்சி தலைவி லட்சுமி சீனிவாசன், நிர்வாகிகள் மனோகரன், ரேவதி, பார்த்தசாரதி, மணிகண்டன், சந்திரசேகர், ராஜபாண்டி, குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கழிவுநீரை வெளியேற்ற உறிஞ்சி குழாய் அமைக்க வேண்டும் என்ற திட்டத்தை கைவிட வலியுறுத்தி செயல் அலுவ லரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.