search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓமன் நாட்டில் சிக்கியுள்ள குமரி மீனவர்கள் 8 பேர் விரைவில் ஊர் திரும்புவார்கள் - விஜய் வசந்த் எம்.பி. தகவல்
    X

    ஓமன் நாட்டில் சிக்கியுள்ள குமரி மீனவர்கள் 8 பேர் விரைவில் ஊர் திரும்புவார்கள் - விஜய் வசந்த் எம்.பி. தகவல்

    • நாட்டிற்கு திரும்ப வழியின்றி தவித்த இந்த மீனவர்களின் நிலைமை நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
    • அபராதம் எதுவும் விதிக்காமல் அவர்கள் இந்தியா திரும்புவர் எனவும் தூதரக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

    நாகர்கோவில் :

    விஜய்வசந்த் எம்.பி. அலுவலக செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஓமன் நாட்டில் வேலைக்கு சென்ற குமரி மாவட்ட மீனவர்கள் 8 பேர் நாடு திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். அவர்களது பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை வேலைக்கு அழைத்துச் சென்ற நிறுவனம் அபகரித்து வைத்திருந்தது.

    நாட்டிற்கு திரும்ப வழியின்றி தவித்த இந்த மீனவர்களின் நிலைமை நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அவர் 8 மீனவர்களையும் தாயகம் அழைத்து வர முயற்சிகள் மேற்கொண்டார். இது குறித்து ஓமன் நாட்டிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு மீனவர்களின் நிலைமையை கேட்டறிர் தார்.

    மேலும் வெளியுறவுத் துறை அமைச்சரை சந்தித்த போதும் இந்த பிரச்சனையை எடுத்து கூறினார்.

    இந்த நிலையில் தூதரக அதிகாரிகள் விஜய் வசந்த் எம்.பி. யை தொடர்பு கொண்டு மீனவர்களின் நிலைமை குறித்து விளக்கினர். மீனவர்கள் நலமாக தூதரக கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அவர்கள் வேலை செய்த நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு அவர்களுக்கு உரிய தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், 8 மீனவர்களும் விரைவில் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தனர். அபராதம் எதுவும் விதிக்காமல் அவர்கள் இந்தியா திரும்புவர் எனவும் தூதரக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×