search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    25 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - அரசு பஸ் டிரைவர் மீது வழக்கு
    X

    25 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - அரசு பஸ் டிரைவர் மீது வழக்கு

    • பஸ்ஸில் இருந்த 35 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்
    • ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பஸ் பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டது.

    நாகர்கோவில் :

    பூதப்பாண்டி அருகே தாழக்குடியிலிருந்து இறச்ச குளம், புத்தேரி, நாகர்கோவில் வழியாக தேரூருக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது.

    நேற்று மதியம் 3 மணியளவில் தாழக்குடியில் இருந்து தேரூருக்கு அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சை மார்த்தாண்டத்தை சேர்ந்த கீரிசன்தம்பி ஓட்டினார்.

    கண்டக்டராக தாழக்குடியைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் (வயது43) என்பவர் இருந்தார். பஸ்சில் சுமார் 45 க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ் புத்தேரியை கடந்து ரயில்வே மேம்பாலத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. அப்போது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

    திடீரென ரோட்டோரத்தில் இருந்த சுமார் 25 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. அப்போது இரண்டு குட்டி காரணம் அடித்து பஸ் கவிழ்ந்ததால் பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். ஒருவர்மீது ஒருவர் மோதிக்கொண்டனர்.

    பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து விழுந்தது. இதையடுத்து பஸ்ஸில் இருந்த 35 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.இதைப் பார்த்த பொதுமக்கள் ஏராளமா னோர் அந்த பகுதியில் திரண்டனர். பஸ்சுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து பற்றி தகவல் அறிந்ததும் நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் அங்கு வந்தனர். எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோரும் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டனர்.

    பின்னர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பொதுமக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினா ர்கள். விபத்து குறித்து புத்தேரி ருக்குமணி நகரைச் சேர்ந்த வீரலெட்சுமி (45) என்பவர் நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் அரசு பஸ் டிரைவர் கீரிசன்தம்பி மீது போலீசார் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதிவேகமாகவும் அஜாக்கி ரதையாகவும் ஓட்டி வந்த தாக வழக்கு பதிவு செய்ய ப்பட்டுள்ளது.

    விபத்தை ஏற்படுத்திய டிரைவர் கீரிசன்தம்பி தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    விபத்தில் சிக்கிய பஸ்சை நேற்று இரவு கிரேன் மூலமாக மீட்கும் பணி நடந்தது. இதையடுத்து அந்த வழியாகச் சென்ற பஸ்கள் அனைத்தும் மாற்று பாதை வழியாக திருப்பி விடப்பட்டிருந்தது.

    அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்களும் திரண்டிருந்தனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பஸ் பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டது.

    Next Story
    ×