search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுற்றுச்சூழல் மாசு காரணமாக 50 ஆண்டுகளில் கொல்கத்தா நகரம் கடலில் மூழ்கும் அபாயம் நீதியரசர் ஜோதிமணி பேச்சு
    X

    கூட்டத்தில் நீதியரசர் ஜோதிமணி பேசிய காட்சி.

    சுற்றுச்சூழல் மாசு காரணமாக 50 ஆண்டுகளில் கொல்கத்தா நகரம் கடலில் மூழ்கும் அபாயம் நீதியரசர் ஜோதிமணி பேச்சு

    • கலந்தாய்வு கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது
    • சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நீதியரசர் ஜோதி மணி பேசினார்.

    ஒட்டன்சத்திரம் :

    தமிழக திடக்கழிவு மேலாண்மைக்கான தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் மாநில அளவிலான கண்கா ணிப்பு குழு தலைவர் நீதியரசர் டாக்டர் ஜோதிமணி ஒட்டன்சத்திரம் சின்னக்கு ளத்தை ஆய்வு செய்தார்.

    அதன் பின்பு கலந்தாய்வு கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையாளர் தேவிகா வரவேற்று பேசினார். நகர் மன்ற தலைவர் திருமலைசாமி முன்னிலை வைத்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நீதியரசர்ஜோதி மணி பேசியதாவது,

    சுற்றுச்சூழலை நாம் அனைவரும் ஒன்றாக இருந்து பாதுகாக்க வேண்டும். உலக சமுதாயத்தில் ஒற்றுமையுடன் இருப்பவர்கள் இந்தியர்கள், அதிலும் தமிழர் கலாச்சாரம் சிறப்பு வாய்ந்ததாகும். கடல் வெப்பமயமாதல் காரணமாக சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. கடல் வெப்பம் 1.5 சதவீதம் இருக்க வேண்டும், கடல் வெப்பம் 1.51 சதவீதம் என்று கூடினால் சுனாமி ஏற்படும்.

    கடல் வெப்பம் 1.52 என்று கூடினால் கடல் தண்ணீர் 200 கி.மீ வரை நகருக்குள் புகும் அபாயம் உள்ளது. இன்னும் 50 ஆண்டு காலத்தில் கொல்கத்தா நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது.

    கொல்கத்தாவில் உள்ள பசுமை இலை காடுகளுக்குள் திருடர்கள் புகுந்து விட்டா ர்கள். அங்குள்ள மணலை அள்ளிச்செல்கி ன்றனர். செங்கல் தொழி ற்சாலைகளை உருவாக்கு கின்றனர். இதனால் தண்ணீர் ஓடாமல் பள்ளங்களில் தேங்குவதால் நகரங்கள் கடலுக்குள் மூழ்ங்கும் அபாயம் உள்ளது.

    சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட 75 சதவீதம் பொதுமக்களே காரணம். திடக்கழிவு மேலாண்மையை சரி செய்தால் அரசாங்கத்திற்கு 50 சதவீத பிரச்சனைகள் தீர்ந்துவிடும். திடக்கழிவுகள் காரணமாக பூமியில் ஏற்படும் நச்சு காரணமாக பெரிய வர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. குழந்தைகளுக்கு மரபணுக் கோளாறுகள் ஏற்படுகின்றன. பொதுமக்கள் நகராட்சிக்கு மக்கும் குப்பை, மக்கா குப்பை என பிரித்து கொடுப்பதன் மூலம் திடக்கழிவு மேலா ண்மையை எளிதாக கையாள முடியும் என பேசினார்.

    கூட்டத்தில் பொறியா ளர்சக்திவேல், மேலாளர் உமா காந்தி, நகர ஊர் அமைப்பு ஆய்வர் ரவிச்சந்தி ரன், துப்புரவு ஆய்வாளர் ரவிசங்கர், வருவாய் ஆய்வாளர் சேக் அப்துல்லா, இளநிலை உதவியாளர்கள் ஈஸ்வரன், கண்ணன், பணி ஆய்வாளர் முகமது ஆசிக் உமர், நகர் மன்ற உறுப்பினர்கள், வர்த்தகர்கள் மற்றும் திருமண மண்டப உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். நிறைவில் தலைமை கணக்கர் சரவண குமார் நன்றி கூறினார்.

    Next Story
    ×