search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஐ.டி.ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை
    X

    ஐ.டி.ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை

    • 10 பவுன் நகைகள் ரூ.15 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
    • கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    கோவை,

    கோவைப்புதூர் அருகே உள்ள திருவிக நகரை சேர்ந்தவ் கோபிநாத்(வயது 27). இவர் பீளமேட்டில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவில் பூட்டப்பட்டு இருந்த பூட்டை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீேராவை திறந்து அதில் இருந்த செயின் ,மோதிரம், கம்மல், தங்க நாணயம் உள்ளபட 10Ð பவுன் தங்க நகைகள் ரூ.15 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய கோபிநாத் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த நகை, பணம் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது. இது குறித்து கோபிநாத் மதுக்கரை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

    இதனை வைத்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐ.டி. ஊழியர் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×