என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தென்காசி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை இயக்குனர் ஆய்வு
  X

  கடையநல்லூர் பகுதியில் தோட்டக்கலைத்துறை இயக்குனர் டாக்டர் பிருந்தா தேவி ஆய்வு செய்த காட்சி.

  தென்காசி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை இயக்குனர் ஆய்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வேளாண்வளர்ச்சி திட்ட செயல்பாடுகள் குறித்த ஆய்வு தோட்டக்கலைத்துறை இயக்குனர் டாக்டர் பிருந்தா தேவி தலைமையில் நடைபெற்றது.
  • 8 வகையான காய்கறி விதைகள் மற்றும் 2 கிலோ மண்புழு உரம் உள்ளிட்வற்றை பயனாளிகளுக்கு வழங்கினார்.

  தென்காசி:

  தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் தென்காசி மாவட்ட கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்வளர்ச்சி திட்ட செயல்பாடுகள் குறித்த ஆய்வு தோட்டக்கலைத்துறை இயக்குனர் டாக்டர் பிருந்தா தேவி தலைமையில் நடைபெற்றது.

  கடையநல்லூர் வட்டாரம் நயினாரகரத்தில் விவசாயிகளிடம் கலந்துரையாடினார். குத்துக்கல்வலசை பஞ்சாயத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட பயனாளிகளுக்கு 8 வகையான காய்கறி விதைகள் மற்றும் 2 கிலோ மண்புழு உரம் உள்ளிட்வற்றை பயனாளிகளுக்கு வழங்கினார்.

  இதேபோல் வாசுதேவநல்லூர் வட்டாரம் ராமசாமியாபுரம், குற்றாலம் அரசு சுற்றுசூழல் பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் அவர் ஆய்வு செய்தார்.

  இதில் தென்காசி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் ஜெயபாரதி மாலதி, வேளாண் இணை இயக்குனர் தமிழ்மலர், உதவி செயற்பொறியாளர் சங்கர், உதவி இயக்குனர் ராஜா, தோட்டக்கலை அலுவலர் விவேகானந்த பத்மநாபன் மற்றம் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×