என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் சுதந்திரதின விழிப்புணர்வு பேரணி-துணைவேந்தர் தொடங்கி வைத்தார்
  X

  பல்கலைக்கழக துணை வேந்தர் பிச்சுமணி என்.சி.சி.மாணவர்களுக்கு தேசியக்கொடியை வழங்கி பேரணியை தொடங்கி வைத்த காட்சி.

  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் சுதந்திரதின விழிப்புணர்வு பேரணி-துணைவேந்தர் தொடங்கி வைத்தார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 75-வது சுதந்திர தினவிழாவையொட்டி அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.
  • சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்களை பற்றி பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.

  நெல்லை:

  75-வது சுதந்திர தினவிழாவையொட்டி அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.

  மேலும் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்களை பற்றி பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.

  நெல்லை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் கடந்த 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அதன்படி இன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

  பல்கலைக்கழகம் முன்பு இருந்து தொடங்கிய பேரணியை துணைவேந்தர் பிச்சுமணி தொடங்கி வைத்தார். பேரணியில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். ராணி அண்ணா மகளிர் கல்லூரி வரை சென்ற பேரணி மீண்டும் பல்கலைக்கழகம் வந்தடைந்தது.

  தொடர்ந்து 1800-ம் ஆண்டு முதல் சுதந்திரம் அடைந்த 1947-ம் ஆண்டு வரை சுதந்திரத்திற்காக பாடுபட்ட வெளி உலகிற்கு தெரியாத பல்வேறு தலைவர்களின் புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சி நடைபெற்றது.

  இதற்காக 93 பேனர்களில் தலைவர்க–ளின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருந்தது. மேலும் தேசப்பற்று குறித்து போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் 19 கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

  இதற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக பேராசிரியர் வெங்கடேஷ் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

  Next Story
  ×