என் மலர்
உள்ளூர் செய்திகள்

தூக்கில் தொங்கி பரிதாபமாக இறந்த குமரேசன்.
பாப்பாரப்பட்டியில் டீ மாஸ்டர் மர்ம சாவு
- பெண்ணின் வீட்டில் பிணமாக தொங்கினார்.
- இந்த மர்ம சாவு குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
பாப்பாரப்பட்டி,
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பி.எஸ். முருகேசன் காலனியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகன் குமரேசன் (வயது29). இவர் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.இவருக்கு வேடிகொட்டாய் பகுதியை சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பெண்ணுடன் கடந்த இரண்டு வருடமாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை அப்பெண்ணின் வீட்டில் தூக்கில் தொங்கியபடி குமரேசன் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story