என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பென்னாகரத்தில் புதிய மின்வாரிய கோட்ட அலுவலக திறப்பு விழா
  X

  பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி புதிய மின் மின்வாரிய கோட்டத்தை திறந்து வைத்தார்.

  பென்னாகரத்தில் புதிய மின்வாரிய கோட்ட அலுவலக திறப்பு விழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மின்வாரிய கோட்டை அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.
  • மேற்பார்வை பொறியாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார்.

  பென்னாகரம்,

  தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் புதிய மின்வாரிய கோட்டை அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.

  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொளி காட்சி மூலம் இதை திறந்து வைத்தார்.அதனைத் தொடர்ந்து பென்னாகரம் மின்வாரிய அலுவலகத்தில் புதிய மின்வாரிய கோட்ட அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

  இந்த நிகழ்ச்சிக்கு மேற்பார்வை பொறியாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், பென்னாகரம் பேரூராட்சி தலைவர் வீரமணி, செயற்பொறியாளர் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

  இந்த நிகழ்ச்சியில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி புதிய மின் மின்வாரிய கோட்டத்தை திறந்து வைத்தார். மேலும் புதிய மின் கோட்டம் அமைக்கப்பட்டதன் மூலம் 57 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு தேவையான விவசாயம் சார்ந்த மின் இணைப்புகளை எளிதாக பெற்றுக் கொள்ள முடியும் எனவும் மேலும் மின்சாரம் சார்ந்த பொது மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என கூறினார்.

  இதனைத் தொடர்ந்து மின்வாரிய ஊழியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் செயற்பொறியளர்கள் மணிமேகலை, தமிழரசி, உதவி செயற் பொறியாளர் வித்யா, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் தர்மசெல்வன், மாவட்ட அவை தலைவர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர் மடம் முருகேசன், பூம்புகார் சின்னசாமி, பி.ஆர்.மாதையன், பா.ம.க. மாவட்ட தலைவர் செல்வகுமார், இளைஞர் சங்கத் தலைவர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள், மின்வாரிய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×