என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
கம்பைநல்லூர் பேரூராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
- குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
- குழந்தைகள் திருமணம் நடைபெறுவதை தடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மொரப்பூர்,
கம்பைநல்லூர் பேரூராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் வடமலை முருகன் தலைமை வகித்தார்.பேரூராட்சி துணை தலைவர் மதியழகன்,பேரூராட்சி செயல் அலுவலர் ஜெகதீசன், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பேரூராட்சி உதவியாளர் ராஜ்குமார் வரவேற்று பேசினார்.
இக்கூட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழு திருத்தி அமைத்தல், கம்பை நல்லூர் பேரூராட்சி பேருந்து நிலையத்தில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பலகைகள் நிறுவி பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்ப டுத்துதல், கம்பைநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் குழந்தைகள் நலப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் கூட்டம் நடத்துதல்,குழந்தைகள் திருமணம் நடைபெறுவதை தடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் பேரூராட்சி உறுப்பினர்கள் சரவணன், சங்கீதா ஜெய்குமார்,ரமேஷ், மற்றும் கிராம அலுவலர்கள், அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிமாணவியர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர், நகர் புற சுகாதார செவிலியர்கள், சுய உதவி குழு பிரதிநிதிகள்,போலீஸ் நிலைய குழந்தைகள் நல காவல் அலுவலர், இளைஞர் நல குழு பிரதிநிதிகள் தன்னார்வலர்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.முடிவில் பேரூராட்சி உதவியாளர் பழனிசாமி நன்றி கூறினார்.