search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளிகளில்  மாணவர்களை வேலை வாங்கும் தலைமை ஆசிரியர்கள்-   வேதனை தெரிவிக்கும் பெற்றோர்
    X

    புத்தகங்கள் கட்டப்பட்டிருந்த சாக்கு மூட்டையை எடுத்துச் சென்று அருகில் உள்ள தலைமையாசிரியர் அலுவலகத்தில் வைக்க சொல்லி மாணவர்களை வேலைவாங்கும் ஆசிரியர் மற்றும் சாக்கு மூட்டையை தூக்க முடியாமல் தூக்கிச் செல்லும் மாணவர்களை படத்தில் காணலாம்.

    அரசு பள்ளிகளில் மாணவர்களை வேலை வாங்கும் தலைமை ஆசிரியர்கள்- வேதனை தெரிவிக்கும் பெற்றோர்

    • மாணவர்கள் இருவரும் சாக்கு மூட்டையை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.
    • தண்ணீர் எடுத்து வர செய்வது போன்ற பணிகளை செய்ய கட்டாயப்படுத்தக்கூடாது.

    தருமபுரி,

    கல்வி போதிக்கும் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் இடத்தில் வகுப்பறைகள், விளையாட்டு மைதானம், உள்ளிட்டவைகளை சுத்தப்படுத்துவது கழிவறைகளை கழுவ செய்வது, தண்ணீர் எடுத்து வர செய்வது போன்ற பணிகளை செய்ய கட்டாயப்படுத்தக்கூடது என்ற அரசு விதிமுறைகள் இருந்தாலும் அதை கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளில் இவை தொடர்கதையாக நடந்து வருகிறது.

    வகுப்பறையில் அனைத்து மாணவர்களும் அமர்ந்திருக்கும்போது சில குறிப்பிட்ட மாணவர்களை மட்டும் பெயர் சொல்லி அழைத்து வேலை வாங்குவதால் மாணவர்களிடத்தில் ஒருவித அச்சமும், தாழ்வு மனப்பான்மையும் ஏற்படுகிறது.

    தின்னஹள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில் உள்ள நான்காம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்கள் மத்தியில் அமர்ந்திருந்த 2 மாணவர்களை மட்டும் அழைத்து புத்தகங்கள் கட்டப்பட்டிருந்த சாக்கு மூட்டையை எடுத்துச் சென்று அருகில் உள்ள தலைமையாசிரியர் அலுவலகத்தில் வைத்து சொன்னதால் மாணவர்கள் இருவரும் சாக்கு மூட்டையை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.

    எனவே கல்வி துறையும், மாவட்ட நிர்வாகமும் இதுபோன்று குழந்தை பருவத்தில் உள்ள மாணவர்கள் மத்தியில் தாழ்வு மனப்பான்மை ஏற்படும் வகையில் நடந்து கொள்ளும் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாணவ , மாணவிகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×