என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தருமபுரியில் வெவ்வேறு விபத்துகளில் சிறுவன் உள்பட 3 பேர் சாவு
- சிறுநீர் கழிக்க சென்ற போது கார் மோதியதில் தர்சன் ராஜ் படுகாயம் அடைந்தான்.
- தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தர்சன் ராஜ் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தருமபுரி,
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே யுள்ள பெருமைப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராமராஜன். இவர் தனது குடும்பத்துடன் காரிமங்கலம் அருகேயுள்ள சுண்ணாம்பட்டியில் நடந்த கோவில் திருவிழாவுக்காக வந்தார். இவரது மகன் தர்சன் ராஜ் (வயது 12).
இந்த சிறுவன் அப்பகுதியில் சாலை ஓரம் சிறுநீர் கழிக்க சென்ற போது அவ்வழியாக வந்த கார் மோதியதில் படுகாயம் அடைந்தான். தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தர்சன் ராஜ் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள முள்ளிக்காடு பகுதியை சேர்ந்த மாது (40) என்ற கூலி தொழிலாளியும், கள்ளிப்பட்டியை சேர்ந்த மணி (45) என்ற இளநீர் வியாபாரியும் தங்களது இருசக்கர வாகனங்களில் சென்ற போது ஏற்பட்ட விபத்துகளில் உயிரிழந்தனர்.