என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தருமபுரி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 263 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி
- தமிழக அரசின், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% ஒதுக்கீட்டின் படி நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- மாவட்டத்தில் கடந்தாண்டு, நீட் தேர்வில் 36 பேர் தேர்ச்சி பெற்றனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில், 107 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன.
இப்பள்ளிகளை சேர்ந்த, மாணவ,மாணவியர், 1,468 நீட் தேர்வு எழுத விண்ணப்பத்திருந்தனர். இதில், 1,213 பேர், நீட் தேர்வு எழுதினர். இதில் 263 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நீட் தேர்வில் பண்டஹள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் விஷ்ணுகுமார் 376 மதிப்பெண் பெற்று, அரசு பள்ளி மாணவர்களில் முதலிடம் பிடித்துள்ளார்.
களப்பம்பாடி அரசு பள்ளியை சேர்ந்த கவின், 369 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், பி.அக்ரஹாரம் அரசு பள்ளியை சேர்ந்த சரண் 363 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்துள்ளார்.
தமிழக அரசின், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% ஒதுக்கீட்டின் படி நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரசு பள்ளிகளை சேர்ந்த 67 பேருக்கு அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்.-பி. டி. எஸ். படிப்புக்கான சேர்க்கை கிடைக்கும்.
மாவட்டத்தில் கடந்தாண்டு, நீட் தேர்வில் 36 பேர் தேர்ச்சி பெற்றனர். நடப்பாண்டில் 263 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதால், பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு தருமபுரி மாவட்ட சி.இ.ஓ. குணசேரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.