search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் இன்று சப்-இன்ஸ்பெக்டருக்கான எழுத்து தேர்வை 5,272 பேர் எழுதினர்
    X

    கோவையில் இன்று சப்-இன்ஸ்பெக்டருக்கான எழுத்து தேர்வை 5,272 பேர் எழுதினர்

    • தேர்வு நடைபெற்ற மையங்களில் பாதுகாப்பு கருதி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பபட்டிருந்தது.
    • கோவை மாவட்டத்தில் இந்த 4 மையங்களில் மொத்தம் 6891 போில் 5,272 பேர் தேர்வு எழுதி வருகின்றனர்

    சரவணம்பட்டி:

    கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக 2022-ம் ஆண்டுக்கான சார்பு சப்-இன்ஸ்பெக்டர்( தாலுகா மற்றும் ஆயுதப்படை) எழுத்து தேர்வு இன்று நடந்தது.

    கோவையில் சூலூர் ஆர்.வி.எஸ். கல்லூரி, கோவில்பாளையம் எஸ்.என்.எஸ் கல்லூரி, மலுமிச்சம்பட்டி இந்துஸ்தான் கல்லூரி, கவுண்டம்பாளையம் கொங்கு நாடு கல்லூரி என 4 மையங்களில் இந்த தேர்வானது நடைபெற்றது. தேர்வினை முன்னிட்டு காலையில் இருந்தே ஏராளமானோர் மையத்திற்கு வந்த வண்ணம் இருந்தனர்.

    காலை 7 மணிக்கு எழுத்து தேர்வு தொடங்கியது. சமூக இடைவெளியை கடைபிடித்து தேர்வர்கள் தேர்வினை எழுதினர். இந்த தேர்வினை கோவை மாவட்டத்தில் 6,891 பேர் எழுதினர்.

    முன்னதாக தேர்வுக்கு வந்த தேர்வர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை, கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வைத்தனர்.மேலும் அைழப்பு கடிதத்துடன் வந்த தேர்வர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.செல்போன் உள்ளிட்ட வற்றை உள்ளே எடுத்து செல்ல அனுமதிக்கவில்லை.

    தேர்வு மையத்திற்கு வாகனத்தில் வந்தவர்களுக்கு மைதானத்தில் வாகனங்கள் நிறுத்த வசதி செய்யப்பட்டிருந்தது.தேர்வு தொடங்குவதற்கு முன்னதாக வந்தவர்கள் மட்டுமே உள்ளே அனும திக்கப்பட்டனர். தேர்வு நடைபெற்ற மையங்களில் பாதுகாப்பு கருதி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பபட்டிருந்தது.இந்த மையங்களில் கோவை மாவட்ட காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் மற்றும் கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதனைத் தொடர்ந்து கோவை கமிஷனர் பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கோவை மாவட்டத்தில் இந்த 4 மையங்களில் மொத்தம் 6891 போில் 5,272 பேர் தேர்வு எழுதி வருகின்றனர். 1619 பேர் தேர்வு எழுத வரவில்லை.

    மேலும் காலை ஆங்கில தேர்வும், மதியம் தமிழ் எழுத்து தேர்வும் நடைபெறும் எனவும் விண்ணப்பதாரர்கள் அழைப்பு கடிதம், அடையாள அட்டை மற்றும் பேனா போன்றவற்றை மட்டுமே கொண்டு வரவேண்டும். அவற்றை தவிர மற்ற பொருட்களுக்கு அனுமதி இல்லை என ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தோம்.

    தேர்வு நடைபெறும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் தேர்வாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மாவட்ட காவல்துறை செய்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழில் முதல் முறையாக தேர்வு நடப்பது குறிப்பிடத்தக்கது

    Next Story
    ×