என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  விதிகளை மீறி மது விற்பனை - தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
  X

  கோப்புபடம்

  விதிகளை மீறி மது விற்பனை - தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நள்ளிரவில் குடிமகன்கள் அட்டகாசம் செய்வது அதிகரித்துள்ளது.
  • திருப்பூர் எஸ்.பி.,க்கு, தொடர்ந்து புகார் மனு அனுப்பி வருகின்றனர்.

  குடிமங்கலம் :

  குடிமங்கலம், பெதப்பம்பட்டி, பூளவாடி, ராவணாபுரம், மூங்கில்தொழுவு, விருகல்பட்டி ஆகிய இடங்களில் டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்கி வருகின்றன.

  குறிப்பிட்ட இடங்களில் மட்டும் மதுக்கடைகள் இயங்கி வந்தாலும் சனுப்பட்டி வல்லக்குண்டாபுரம் உள்ளிட்ட சில கிராமங்களில் 24 மணி நேரமும் மதுபாட்டில்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுகிறது.சில டாஸ்மாக் மதுக்கடை பார்களிலும் அனைத்து நேரங்களிலும் விதிகளை மீறி மதுபாட்டில்கள் விற்பனையாகிறது.நள்ளிரவில் குடிமகன்கள் அட்டகாசம் செய்வது அதிகரித்துள்ளது.

  டாஸ்மாக் மதுக்கடை திறக்கும் முன்பே, தேவையான மதுவகைகள் கிடைப்பதால் தொழிலாளர்கள் பலர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர்.பல்வேறு குற்றச்சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. சில்லிங் மற்றும் விதிமீறல் மது விற்பனையை குடிமங்கலம் போலீசார் கவனிப்பு அடிப்படையில் கண்டுகொள்வதில்லை.கிராமங்களில் 24 மணி நேரமும் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என திருப்பூர் எஸ்.பி.,க்கு, தொடர்ந்து புகார் மனு அனுப்பி வருகின்றனர்.

  Next Story
  ×