என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கல்குவாரியில் வாலிபர் உடல் சிதறி பலியானது எப்படி?
  X

  கல்குவாரியில் வாலிபர் உடல் சிதறி பலியானது எப்படி?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சேலம் அருகே கல்குவாரியில் வாலிபர் உடல் சிதறி பலியானது எப்படி என போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • இந்த நிலையில் உயிரிழந்த சாம்ராஜின் உறவினர்கள் இறப்பில் சந்தேகம் உள்ளதாக போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

  அயோத்தியாபட்டணம்:

  சேலம் அருகே அயோத்தி யாப்பட்டணத்தை அடுத்த அக்ரஹாரநாட்டாமங்கலம் பகுதியில் தனியார் கல்கு வாரி இயங்கி வருகிறது. இதில் தர்மபுரி மாவட்டம் நாகர்குடல் பகுதியைச் சேர்ந்த பெரியண்ணன் மகன் சாம்ராஜ் (வயது 34) என்பவர் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக பாறை உடைக்க பயன்படுத்தும் பிரத்யோக டிராக்டரில் டிரைவராக பணிபுரிந்துள்ளார். இவர் பா.ம.க., கட்சி வார்டு உறுப்பினராகவும் இருந்து உள்ளார். இவருக்கு புனிதா (27) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

  இந்த நிலையில் நேற்று டிராக்டருடன் கவிழ்ந்த நிலையில் உடல் சிதைந்த நிலையில் பி ண மாக கிடந்தார். இதைப்பார்த்த அப்பகுதியில் இருந்த தொழி லாளர்கள் இது குறித்து காரிப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடு த்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற காரிப்ப ட்டி போலீசார் தடய ங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.இந்த நிலையில் உயிரிழந்த சாம்ராஜின் உறவினர்கள் இறப்பில் சந்தேகம் உள்ளதாக போலீ சாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பா.ம.க., கட்சியினர் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் திரண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

  இதையடுத்து இரு தரப்பையும் போலீசார் சமதானம் செய்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதன்பின்னர் உயிரிழந்த சாம்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

  இது குறித்து காரிப்பட்டி போலீசார் சந்தேக மரணம்

  என வழக்கு பதிவு செய்த னர். சாம்ராஜ் பலியானது எப்படி என்பது குறித்து கல்குவாரி உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×