search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தோட்டக்கலை பயிர்களின்   பாதுகாப்பிற்காக மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள்  -வேளாண்துறை அதிகாரி விளக்கம்
    X

    தோட்டக்கலை பயிர்களின் பாதுகாப்பிற்காக மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் -வேளாண்துறை அதிகாரி விளக்கம்

    • முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை துறை அதிகாரி விளக்கமளித்துள்ளார்.
    • அலுவலர்களை தொடர்பு கொண்டு தகவல்களை தெரிந்து கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளார்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி மற்றும் அதனை சுற்றுவட்டார பகுதியில் தொடரும் கனமழை காரணமாக தோட்டக்கலை பயிர்கள் பாதுகாப்பிற்காக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை துறை அதிகாரி விளக்கமளித்துள்ளார்.

    காய்கறி பயிர்களான வெண்டை, கத்தரி, கொத்தவரை, மிளகாய் மற்றும் கொடிவகை ஆகியவற்றுக்கு முறையாக மண் அணைப்பது மற்றும் வடிகால் வசதி ஏற்படுத்துவதன் மூலம் நீர்த்தேக்கத்தினால் வேர்பகுதி அழுகுவதை தவிர்க்கலாம்.

    வாழை தோப்பினை சுற்றி வாய்க்கால் எடுத்து மழை நீர் தேங்காமல் வெளியேற வடிகால் செய்ய வேண்டும். பழ மரங்களில் கவாத்து செய்த பின் வெட்டப்பட்ட பகுதியில் காப்பர் ஆக்ஸி குளோரைடு 300 கிராம் ஒரு லிட்டர் நீரில் கலந்து பூசுவது மூலம் பூச்சி மற்றும் நோய் தாக்குலை தவிர்க்கலாம்.

    இலைவழி உரம் அளித்து பயிரின் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்தல் வேண்டும். குச்சி பந்தல் அமைத்து கொடிவகை காய்கறிகள் பயிர் செய்வோர் மண் அனைத்தும் வலுவிழந்த பகுதியில் கூடுதல் ஊன்றுகோல் அமைத்தும் பந்தல் சாய்வதை தடுக்க வேண்டும்.

    இதர தோட்டக்கலை பெயர்கள் பயிரிடும் அனைத்து தோட்டங்களிலும் அதிக மழைநீர் தேங்காத வண்ணம் உரிய வடிகால் வசதி செய்திட வேண்டும். நீர் பாசனம் மற்றும் உரமிடுதல் ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என நல்லம்பள்ளி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் துரைராஜ் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்கள் அறிய உதவி தோட்டக்கலை அலுவலர்களை தொடர்பு கொண்டு தகவல்களை தெரிந்து கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளார்.

    Next Story
    ×