search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் கைத்தறி சிறப்பு கண்காட்சி
    X

    கைத்தறி கண்காட்சியை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ தொடங்கி வைத்து பார்வையிட்டபோது எடுத்தபடம்.

    நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் கைத்தறி சிறப்பு கண்காட்சி

    • கைத்தறி தொழிலை மேம்படுத்தி நெச வாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் பொருட்டு ஆண்டுதோறும் ஆகஸ்ட் 7-ந்தேதி தேசிய கைத்தறி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட கைத்தறி ஜவுளிகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது

    நெல்லை:

    சுதேசி இயக்கத்தினை நினைவு கூறும் பொருட்டு கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அதன் பங்களிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வும், கைத்தறி தொழிலை மேம்படுத்தி நெச வாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் பொருட்டு ஆண்டுதோறும் ஆகஸ்ட் 7-ந்தேதி தேசிய கைத்தறி தினமாக கொண்டா டப்பட்டு வருகிறது.

    கண்காட்சி

    8-வது தேசிய கைத்தறி தினம் இன்று கொண்டா டப்பட்டது. இதையொட்டி நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கைத்தறி துறையால் சிறப்பு கைத்தறி கண்காட்சி நடைபெற்றது. இதனை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ தொடங்கி வைத்தார்.

    இதில் நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட கைத்தறி ஜவுளிகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

    கடனுதவி

    நிகழ்ச்சியில் நெசவா ளர் நல்வாழ்வு திட்ட உதவித்தொகை, நெசவா ளர் முத்ரா கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் மானியத்து டன் கூடிய கடன் என 38 பயனாளிகளுக்கு ரூ.26 லட்சத்து 83 ஆயிரத்து 65 கடனுதவியாக வழங்க ப்பட்து.இதில் நெல்லை கைத்தறி உதவி இயக்குநர் சங்கரேஷ்வரி, லெட்சுமி வெங்கடசுப்பிரமணியன், கைத்தறி அலுவலர், அலுவலக பணியாளர்கள், நெசவாளர் கூட்டுறவு சங்க பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×