search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானல் அருகே இயற்கை விவசாயத்தை முன்னெடுத்து வரும் பட்டதாரி இடைத்தரகர் இன்றி விற்பனை அமோகம்
    X

    இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட கேரட்டுகள்.

    கொடைக்கானல் அருகே இயற்கை விவசாயத்தை முன்னெடுத்து வரும் பட்டதாரி இடைத்தரகர் இன்றி விற்பனை அமோகம்

    • பட்டதாரி வாலிபர் விவசாய நிலத்தை குத்த கைக்கு எடுத்து அதில் உருளைக்கிழங்கு, வெள்ளை ப்பூண்டு உள்ளிட்ட மலைக் காய்கறிகளை பயிரிட்டு இயற்கை முறையில் விவ சாயம் செய்து வருகிறார்.
    • மேலும் பழமையை மறந்து வரும் இக்காலச் சூழலில் இந்த இளைஞர் நந்தகுமார் மண் வீடு, மண் சட்டியில் சமையல் செய்து பழமையை புதுமையாக மாற்ற முயற்சி செய்து வருகிறார்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை கொண்ட பிரபல சுற்றுலாத்தலம். மலைவாசஸ்தலமாக இருக்கக்கூடிய கொடைக்கா னலுக்கு பல சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

    மேலும் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் மட்டும் அல்லாது இங்கு விளையக்கூடிய மலைக் காய்கறிகளும் பிரபலம்.குறிப்பாக மலைப்பகுதியில் விளையக்கூடிய உருளை க்கிழங்கு, வெள்ளை பூண்டு பீன்ஸ், கேரட், கோஸ், காளிபிளவர் உள்ளிட்ட காய்கறிகள் இங்கு பயிரிட ப்பட்டு வருகிறது.கொடைக்கானலைச்சுற்றி இருக்கக்கூடிய 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இதுவே பிரதான தொழிலாக இருந்து வருகிறது.

    இந்நிலையில் கொடை க்கானல் அருகில் இருக்கக்கூடிய வடகவுஞ்சி கிராமத்தில் குத்தகைக்கு விவசாய நிலத்தை எடுத்து அதில் இயற்கையாக விவசாயம் செய்து வருகிறார் நந்தகுமார் என்ற இளைஞர். 26 வயதே ஆன இவர் எம்.பி.ஏ பட்டதாரி ஆவார். விவசாயம் மீது உள்ள ஆர்வத்தின் காரணமாக வடகவுஞ்சி கிராமத்தில் விவசாய நிலத்தை குத்த கைக்கு எடுத்து அதில் உருளைக்கிழங்கு, வெள்ளை ப்பூண்டு உள்ளிட்ட மலைக் காய்கறிகளை பயிரிட்டு இயற்கை முறையில் விவ சாயம் செய்து வருகிறார்.

    மேலும் அப்பகுதியில் இருக்கக்கூடிய காய்கறிகள் மற்றும் பழங்களை இடை த்தரகர்கள் இன்றி விற்பனை செய்து வருகிறார். மேலும் தினமும் விவசாயம் குறித்து சமூக வலைத்தளங்களான முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பக்கங்களில் பதிவு செய்து வருவது இணையதள வாசிகள் இடையே பெரும் வர வேற்பை யும் பெற்றிருக்கிறது.இணையதளத்தையே முதலீடாக வைத்து வாட்ஸ் அப் குரூப் மூலம் வாடிக்கை யாளர்களுக்கு இடைத்த ரகர்கள் இன்றி இவர் நிலத்தில் விளையும் விளை பொருட்களை கூரியர் மூலமாக அனுப்பி வைக்கி றார்.

    மேலும் மலைத்தேன் உள்ளிட்டவை வாடிக்கை யாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிரு க்கிறது. நாடே விவசாயத்தை இழந்து வரும் இச்சூழலில் அடுத்த தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக இருக்கக்கூடிய இளம் விவசாயிகள் உருவாக வேண்டும் என்பதே ஒற்றைக் கருத்தாக உள்ளது.

    மேலும் பழமையை மறந்து வரும் இக்காலச் சூழலில் இந்த இளைஞர் நந்தகுமார் மண் வீடு, மண் சட்டியில் சமையல் செய்து பழமையை புதுமையாக மாற்ற முயற்சி செய்து வருகிறார்.

    Next Story
    ×