என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கமலநத்தம் பகுதிக்கு வந்த அரசு பேருந்தை  பூஜை செய்து வரவேற்ற பொதுமக்கள், பள்ளி மாணவர்கள்
  X

  அரசு பஸ்சை பூஜை செய்து வரவேற்ற கிராம மக்கள் மற்றும் மாணவ, மாணவிகள்.

  கமலநத்தம் பகுதிக்கு வந்த அரசு பேருந்தை பூஜை செய்து வரவேற்ற பொதுமக்கள், பள்ளி மாணவர்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நீண்ட நாள் கோரிக்கையாக அப்பகுதிக்கு பேருந்து வசதி கேட்டு வந்தனர்.
  • இனிப்புகளை வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

  தொப்பூர்,

  தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் சாமி செட்டிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கமலநத்தம் கிராம பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக அப்பகுதிக்கு பேருந்து வசதி கேட்டு வந்தனர். இதனை பலமுறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியிருந்தனர்‌.

  தற்போது இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு அரசு பேருந்து புதிய வழித்தடங்கள் மற்றும் புதிய வழித்தட நீட்டிப்பு மூலம் கமலநத்தம் கிராமத்திற்கு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

  இந்நிலையில் புதிதாக வருகை புரிந்த வழித்தடம் எண். 10-பி பேருந்துக்கு ஊர் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் அனைவரும் ஒன்று திரண்டு பூஜை செய்து ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்ட அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

  கமலநத்தம் கிராம பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்த தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கும் ஊர் பொது மக்களும் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளும் தங்கள் நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

  Next Story
  ×