search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காமராஜர் சிலை பாதுகாப்பு குழுவின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
    X

    ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய போது எடுத்தபடம்.  

    காமராஜர் சிலை பாதுகாப்பு குழுவின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

    • நெல்லை சந்திப்பு பெருந்தலைவர் காமராஜர் சிலை பாதுகாப்பு குழு சார்பில் காமராஜர் பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா டவுனில் நடைபெற்றது.
    • விழாவிற்கு எஸ்.வி.கணேசன் தலைமை தாங்கினார்.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு பெருந்தலைவர் காமராஜர் சிலை பாதுகாப்பு குழுவின் சார்பில் காமராஜர் 120-வது பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நெல்லை டவுன் கணேஷ் தியேட்டரில் நடைபெற்றது. எஸ்.வி.கணேசன் தலைமை தாங்கி, ஏழைகளுக்கு இலவச வேட்டி- சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் நெல்லை நாடார் உறவின்முறை சங்க தலைவர் அசோகன் நாடார், மகாகிப்ட்சன், அந்தோணி ஜெயபாண்டி நாடார், ஜோசப், நெல்லை சந்திப்பு பெருந்தலைவர் காமராஜர் சிலை பாதுகாப்பு குழு தலைவர் சரத் கண்ணன், செயலாளர் கணேஷ் பாண்டியன், பொருளாளர் விஜயகுமார், துணைத்தலைவர் சரத் ராஜேஷ், துணை செயலாளர் சுதாகர் மற்றும் பாம்பு கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×