search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லோன் வழங்குவதாக கூறி பெண்ணிடம் ரூ.3.30 லட்சம் மோசடி
    X

    லோன் வழங்குவதாக கூறி பெண்ணிடம் ரூ.3.30 லட்சம் மோசடி

    • வங்கி எண்ணில் பல தவணைகளாக ரொக்கம் செலுத்தி வந்தேன்.
    • பல நாட்கள் ஆகியும் எனக்கு லோன் வாங்கி தராதால் ஏமாற்றமடைந்து புகார் தெரிவித்தேன்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பந்தக்காடு பகுதியை சேர்ந்த கலைசெல்வன் மனைவி ராமு (வயது 28) என்பவர் தஞ்சை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    எனது செல்போனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தொழில் தொடங்க, வீடு கட்ட உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு நாங்கள் லோன் தருகிறோம். அதற்கு முன்பணம் கட்ட வேண்டும் என்று குறிப்பிட்டார். இதனை உண்மை என்று நம்பிய நான் அந்த நபர் குறிப்பிட்ட வங்கி எண்ணில் பல தவணைகளாக ரூ.3 லட்சத்து 30 ஆயிரத்து 217 கட்டினேன். ஆனால் பல நாட்களாக எனக்கு லோன் வாங்கி தரவில்லை.

    இதனால் அந்த நம்பரை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பலமுறை தொடர்பு கொண்டும் பலன் இல்லை. அப்போது தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்தேன். அந்த மர்ம நபரை கண்டுபிடித்து எனது பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×