என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பரமத்திவேலூர் அருகே கரும்புத் தோட்டத்தில் தீ
  X

  பரமத்திவேலூர் அருகே கரும்புத் தோட்டத்தில் தீ

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ரமேஷ் (வயது 45). விவசாயி. இவரது தோட்டம் அருகாமையில் உள்ளது. அதில் கரும்பு பயிரிட்டிருந்தார்.
  • இந்நிலையில் நேற்று திடீரென கரும்பு தோட்டத்தில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

  பரமத்தி வேலூர்:

  நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா கூடச்சேரி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). விவசாயி. இவரது தோட்டம் அருகாமையில் உள்ளது. அதில் கரும்பு பயிரிட்டிருந்தார். கரும்பு வெட்டும் தருவாயில் இருந்தது.

  இந்நிலையில் நேற்று திடீரென கரும்பு தோட்டத்தில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை . இதுகுறித்து ரமேஷ் வேலாயுதம்பாளையம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

  தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று, கரும்பு தோட்டத்தில் பரவிய தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

  அருகாமையில் உள்ள தோட்டங்களுக்கு தீ பரவாமல் தடுத்ததால், பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் ரூ. 1 லட்சம் மதிப்பிலான கரும்பு பயிர் தீயில் எரிந்து நாசமாயின.

  Next Story
  ×