என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவையில் என்ஜினீயரை தாக்கிய தந்தை-மகன்
- திருப்பதி, வசந்தகுமார் ஆகியோர் கணேஷ்குமாரிடம் நீ எப்படி எங்களை வேலையை விட்டு நிறுத்தலாம்? என கேட்டு தகராறு செய்தனர்.
- காயமடைந்த வாலிபரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
கோவை:
கோவை உப்பிலிபாளையம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் கணேஷ்குமார்(வயது 42). என்ஜினீயர். இவரிடம் அதேபகுதியை சேர்ந்த திருப்பதி (50), அவரது மகன் வசந்தகுமார் (30) ஆகியோர் வேலை பார்த்தனர்.
அப்போது அவர்கள் செய்யாத வேலையை செய்ததாக கூறி கணேஷ்குமாரிடம் பணம் பெற்றதாக தெரிகிறது. இதனை அறிந்த கணேஷ்குமார் தந்தை, மகன் இருவரையும் வேலையை விட்டு நிறுத்தி விட்டார். இதனால் இருவரும் என்ஜினீயர் மீது ஆத்திரத்தில் இருந்தனர்.
இந்நிலையில், சம்பவத்தன்று கணேஷ்குமார் உப்பிலிபாளையம் காந்திநகரில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திருப்பதி, வசந்தகுமார் ஆகியோர் கணேஷ்குமாரிடம் நீ எப்படி எங்களை வேலையை விட்டு நிறுத்தலாம்? என கேட்டு தகராறு செய்தனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த இருவரும் தகாத வார்த்தைகளால் பேசி கணேஷ்குமாரை இரும்பு கம்பியால் தாக்கினர்.
இதில் காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். புகாரின் பேரில், சிங்காநல்லூர் போலீசார் திருப்பதி, அவரது மகன் வசந்தகுமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.