என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஆவணி ஞாயிறுற்றுக்கிழமை விரதம்; மீன்- இறைச்சி கடைகள் வெறிச்சோடின
  X

  மீன் மார்க்கெட் வெறிச்சோடின.

  ஆவணி ஞாயிறுற்றுக்கிழமை விரதம்; மீன்- இறைச்சி கடைகள் வெறிச்சோடின

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மற்ற நாட்களை விட கூடுதலாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவர்.
  • தஞ்சையில் உள்ள மீன் மார்க்கெட்டில் வழக்கத்தை விட கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

  தஞ்சாவூர்:

  தஞ்சை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஆவணி மாதம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அதிலும் ஆவணி மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் மற்ற நாட்களை விட கூடுதலாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவர். இதனால் ஆவணி மாதத்தில் குறிப்பாக ஞாயிற்றுக் கிழமைகளில் புன்னைநல்லூர் மாரியம்மனை தரிசனம் செய்யும் தஞ்சை மாவட்ட மக்கள் விரதம் இருந்து அசைவத்தை தவிர்த்து வருகின்றனர். இதனால் ஞாயிற்றுக் கிழமைகளில் பெரும்பாலானோர் அசைவ உணவுகளை தவிர்த்து விடுகின்றனர். இன்று ஆவணி மாத 3-வது ஞாயிற்றுக்கிழமை என்பதால் தஞ்சையில் உள்ள மீன் மார்க்கெட்டில் வழக்கத்தை விட கூட்டம் குறைந்து காணப்பட்டது. மிக குறைந்த அளவிலேயே மக்கள் வந்து மீன்களை வாங்கி சென்றனர். இதனால் மீன் மார்க்கெட் வெறிச்சோடின. கொண்டி ராஜபாளையம் தற்காலிக மீன் மார்க்கெட், தொம்பன்குடிசை மீன் மார்க்கெட் உள்ளிட்ட அனைத்து மீன் மார்க்கெட்டுகளிலும் மீன் வாங்க வருபவர்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட குறைந்து காணப்பட்டது.

  இதேபோல் ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் மிக குறைவாக காணப்பட்டது. பெரும்பாலான இறைச்சி கடைகள் வெறிச்சோடியே இருந்தது.

  Next Story
  ×