search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குறுவை பயிருக்கு இன்சூரன்ஸ் திட்டத்தை அறிவிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
    X

    குறுவை பயிருக்கு இன்சூரன்ஸ் திட்டத்தை அறிவிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

    • குறுவை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவித்து விதைகள், உரங்களை வழங்கியது.
    • குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் எதிர்வரும் பருவநிலை மாற்றங்களால் ஏற்பட போகும் நிலைமையை எண்ணி கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

    பூதலூர்:

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்ட பாசனத்துக்காக மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டது. இதனால் வேளாண் துறையால் நிர்ணயிக்கப்பட்ட குறுவை சாகுபடி இலக்கை தாண்டி ஐந்தரை லட்சம் ஏக்கர் பரப்பில் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறுவை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவித்து விதைகள், உரங்களை வழங்கியது.

    தற்போது அடிக்கடி மழை பெய்து வருகிறது. இதனால் நடவு செய்யப்பட்ட குறுவை இளம் பயிர்களில் இருந்து வளர்ந்த பயிர்கள் வரை பாதிப்படைய கூடும் என்று விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

    அதே சமயத்தில் டெல்டா மாவட்டங்களில் நிலவும் கடுமையான உரத்தட்டுப்பாடு காரணமாக விளைச்சல் பாதிக்கும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது போன்ற சூழ்நிலையில் பயிர் இன்சூரன்ஸ் திட்டம் விவசாயிகளுக்கு இழப்பை ஓரளவுக்கு ஈடு செய்யும் திட்டமாக அமைந்திருந்தது. கடந்த ஆண்டு குறுவைக்கு பயிர் இன்சூரன்ஸ் திட்டம் தமிழகத்தில் அமுல்படுத்தப்படவில்லை. இந்த ஆண்டு இந்த பருவத்திற்கான பயிர் இன்சூரன்ஸ் திட்டம் ஜூலை 31ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்டது.

    ஆனால் காலக்கெடு முடிவடைந்த நிலையிலும் எந்த அறிவிப்பும் வராததால் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் எதிர்வரும் பருவநிலை மாற்றங்களால் ஏற்பட போகும் நிலைமையை எண்ணி கவலையில் ஆழ்ந்துள்ளனர். தமிழக அரசு விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு விவசா–யிகளை காப்பாற்றும் நோக்கில் குறுவை சாகு–படிக்கான புதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

    Next Story
    ×