search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகள் சாலை மறியல்
    X

    விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.

    விவசாயிகள் சாலை மறியல்

    • அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
    • இந்த மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை சட்டமாக்க வேண்டும், வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும் இன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களிவ் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் சாலை மறியல் நடைபெற்றது.

    அதன்படி தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே ஐக்கிய விவசாயிகள் முன்னணி நிர்வாகிகள் சாமி.நடராஜன், என்.வி.கண்ணன், செந்தில்குமார், காளியப்பன், வீரமோகன், திருநாவுக்கரகூ, ஏ.ஐ.டி.யூ.சி. துரைமதிவாணன், சி.ஐ.டி.யூ. அன்பு உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 42 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×