search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளாத்திகுளத்தில் விவசாய சங்க கூட்டம்
    X

    விளாத்திகுளத்தில் விவசாய சங்க கூட்டம்

    • விளாத்திகுளம் புதூர் வட்டார அனைத்து விவசாயிகள் ஆலோசனை கூட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்றது
    • இந்த ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் கந்தசாமி, பெருமாள், செண்பகராஜ், ஜெயராம், பழனிகுமார், விளாத்திகுளம் சுற்று வட்டாரப் பகுதிக்கு உட்பட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் புதூர் வட்டார அனைத்து விவசாயிகள் ஆலோசனை கூட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்றது. முருகேசன் தலைமை தாங்கினார். பிரேம்குமார் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் 2020-2021-ம் ஆண்டுக்கான விடுபட்ட பயிர்களுக்கு காப்பீட்டு தொகை உடனடியாக வழங்க வேண்டும், 2021-2022-ம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும், விவசாயிகள் வண்டல் மண் அள்ளுவதற்கு கிராம நிர்வாக அலுவலர் அனுமதி வழங்கும் எளிய முறை நடைமுறைப்படுத்த வேண்டும், விவசாயப் பணி தொடங்க இருப்பதால் செப்டம்பர் 15-க்குள் அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் கந்தசாமி, பெருமாள், செண்பகராஜ், ஜெயராம், பழனிகுமார், விளாத்திகுளம் சுற்று வட்டாரப் பகுதிக்கு உட்பட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×