என் மலர்
உள்ளூர் செய்திகள்

விவசாயிகள் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்.
வருசநாடு கூட்டுறவு வங்கி முறைகேடுகளை கண்டித்து விவசாயிகள் பரபரப்பு போஸ்டர்
- கூட்டுறவு வங்கியை கண்டித்து விவசாயிகள் சார்பில் பரபரப்பு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.
- கூட்டுறவு வங்கியில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வருசநாடு:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வருசநாடு பகுதியில் தொடக்க வேளாண்ைம கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. வருசநாடு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் பல்வேறு தேவைகளுக்காக இங்கு வருகின்றனர்.
இந்த நிலையில் கூட்டுறவு வங்கியை கண்டித்து விவசாயிகள் சார்பில் பரபரப்பு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதில் அரசு பயிர் கடன் தள்ளுபடி செய்ததில் வருசநாடு கூட்டுறவு வங்கி பணியாளர் மற்றும் இணைப்பதிவாளர் முறைகேடுகளில் ஈடுபட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் தகர கொட்டகை மற்றும் அலுவலக சுற்றுச்சுவர் அமைத்ததில் மோசடி, மாடு பராமரிப்பு மற்றும் விவசாய கடன் வழங்குவதற்கு விவசாயி களிடம் வசூல் வேட்டை, 5 சவரன் தள்ளுபடிக்கு 280 விவசாயிகளிடம் 10 சதவீதத்துக்கும் மேல் கமிஷன் கேட்பதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டி ருந்தது.
இந்த முறைகேடுகள் குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அனைத்து விவசாயிகள் சார்பில் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர். மேலும் கூட்டுறவு வங்கியில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.