என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ராகுல் மாரத்தான் ஓடினாலும் காங்கிரசுக்கு எந்த பயனும் இல்லை
  X

  ராகுல் மாரத்தான் ஓடினாலும் காங்கிரசுக்கு எந்த பயனும் இல்லை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கிய கப்பல்.
  • வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. பேட்டி அளித்தார்.

  கோவை

  ராகுல் காந்தியின் நடை பயணம் குறித்து பா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி யதாவது:-

  இறந்து போன காங்கிரஸ் கட்சியை ராகுல் காந்தியின் நடைபயணத்தின் மூலம் உயிரோட்ட முடியுமா என்று முயற்சி செய்து பார்க்கிறார்கள். சமீப காலமாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தேசிய சிந்தனையால் ஈர்க்கப்பட்டு மோடியின் செயல்பாடுகளால் அவர்கள் பா.ஜனதாவிற்க்கு வந்து கொண்டு இருக்கிறார்கள்.ஆகவே கட்சியை மீட்க ராகுல் காந்தி இந்த பலப்பரீட்சையில் ஈடுபட்டிருக்கிறார்.

  காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கிய கப்பல். ராகுல் காந்தி நடந்தாலும் சரி, ஓடிப்போனாலும் சரி, ,மாரத்தான் செய்தாலும் சரி அது எந்த பயனையும் தராது.

  ராகுல் காந்தியின் இந்த நடைபயணம் அவரது உடல் நலத்திற்கு நல்லதாக இருக்கலாம். நாட்டிற்க்கும், காங்கிரஸ் கட்சிக்கும் ஒரு போதும் பயணில்லை.

  இவ்வாறு அவர் கூறினார்.

  Next Story
  ×