என் மலர்
ஈரோடு
சென்னிமலை:
சென்னிமலை அடுத்துள்ள காளிக்காவலசு பகுதியினை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 60). இவர் அரசு பஸ் கண்டக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவருக்கும் இவரது மனைவி முத்துலட்சுமிக்கும் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக பல ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். பழனிசாமி 1010 நெசவாளர் காலனிப் பகுதியில் வசித்து வந்தார்.
இவர் கடந்த 13-ம் தேதி காலை வீட்டினுள்ளே கைகள் பின்புறமாக கயிற்றின் மூலம் கட்டப்பட்ட நிலையிலும், வாயைத்துணியைக் கொண்டு மூடி வைத்த நிலையிலும் ரத்த வெள்ளத்தில் கொலையாகி கிடந்தார்.
இதை தொடர்ந்து சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் கொலையாளிகளை போலீசார் தேடி வந்தனர். செல்போன் உதவியுடன் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். இதில் சம்மந்தப்பட்ட ஒருவன் தலைமறைவாகி விட்டான்.
இந்த கொலை பற்றி போலீசார் விசாரணையில் திடுக்தகவல் கிடைத்து உள்ளது.
தனியாக வசித்து வந்த பஸ் கண்டக்டர் பழனிசாமியிடம் அதிக பணம் இருப்பதை அவரது நண்பர்கள் பார்த்து அதனை அபகரிக்க திட்டமிட்டனர்.
அதன்படி கொலை நடந்த அன்று பழனிசாமியின் நண்பர்கள் சென்னிமலையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆறுச்சாமி (46), சென்னிமலை அடுத்த அம்மாபாளையத்தை சேர்ந்த மற்றொரு ஆட்டோ டிரைவர் பாலாஜி, மேலும் புளியம்பட்டியை சேர்ந்த பூபதி, சிவன்மலை பகுதியை சேர்ந்த மகேந்திரன், மதுரையை சேர்ந்த முத்துகுமார் ஆகிய 5 பேரும் பழனிசாமி வீட்டுக்கு வந்தனர்.
அங்கு பழனிசாமியுடன் சேர்ந்து 6 பேரும் மது குடித்துள்ளனர். பழனிசாமி தூங்கிய சமயத்தில் நண்பர்கள் 5 பேரும் எழுந்து பீரோவை திறந்து பணம் உள்ளதா என பார்த்தனர்.
அப்போது அங்கு பணம் ஏதும் இல்லை. அதே சமயம் பழனிசாமி திடீரென முழித்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த 5 பேரும் சேர்ந்து அவரை தாக்கினர். அவரது வாயில் துணியால் அமுக்கி கழுத்தை நெரித்தனர். இதில் பழனிசாமி பரிதாபமாக இறந்தார்.
மது போதையில் பணத்துக்காக நண்பரையே கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.
போலீசார் திறமையாக செயல்பட்டு கொலையாளிகள் ஆறுச்சாமி, பாலாஜி, பூபதி, மகேந்திரன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள முத்தூர் குமாரை விரைவில் பிடித்து விடுவோம் என கூறினர்.
ஈரோடு:
ஈரோடு திண்டலில் உள்ள வேளாளர் மகளிர் கல்லூரியில் இன்று வேளாளர் கல்வி அறக்கட்டளை பொன்விழா நடந்தது. விழாவுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கி பேசினார்.
மாவட்ட கலெக்டர் கதிரவன் முன்னிலை வகித்தார். விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். சரியாக இன்று காலை 10.30 மணிக்கு கல்லூரிக்கு வந்த அவரை கல்லூரி நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்க்கப்பட்டார்.
தொடர்ந்து கல்லூரி மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட முதல்வர் மேடைக்கு சென்றார்.

கல்லூரியின் பொன் விழா கட்டிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து பேசினார்.
இந்த கல்லூரி பொன் விழாவில் பங்கேற்பதில்பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு மாணவிகள் நிறைந்து உள்ளனர்.
பெண்கள் கல்வி கற்க கூடாது என அந்த காலத்தில் பெண்கள் படிக்க கடும் எதிர்ப்பு இருந்தது. அப்படிப்பட்ட அந்த காலத்தில் கமலா சத்தியநாதன் என்ற பெண் இந்த தடைகளையெல்லாம் உடைத்தெறிந்து 1901-ம் ஆண்டு முதுகலை பட்டம் பெற்றார். இதன் மூலம் முதல் முதுகலைப்பட்டம் பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றார்.
அதன் பிறகு பெண்கள் வாழ்வுக்கு அரும்பாடுபட்டார். பெண்களுக்காகவே பத்திரிக்கையை தொடங்கினார். பத்திரிக்கை தொடங்கிய முதல் பெண்மணி இவர் தான். இவரது வாழ்க்கையை முன் உதாரணமாக கொண்டு இங்குள்ள மாணவிகள் வாழ்வில் முன்னேற வேண்டும். நீங்கள் படிக்கும் கல்லூரி நிறுவனத்துக்கும் இந்த நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும்.
இந்த அரசு கல்வி வளர்ச்சிக்கு பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. உங்கள் கவனம் முழுவதும் படிப்பில் இருக்க வேண்டும். உங்களை எண்ணி உங்கள் பெற்றோர்கள் கனவு கண்டு இருப்பார்கள். அந்த கனவை நனவாக்க மாணவிகளாகிய நீங்கள் பாடுபட வேண்டும். சமுதாய பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
மாணவிகளாகிய உங்கள் கவனம் படிப்பில் மட்டும் இருக்க வேண்டும். ஒரு நாட்டின் வளர்ச்சி பெண்களின் கல்வியை சேர்ந்து தான் உள்ளது. டீன் ஏஜ் பருவம் என்பது அலை பாயும் பருவம். அந்த பருவத்தில் சிறப்பாக படித்து முன்னேற வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பவர்கள் பெண்கள் தான்.
தமிழகத்தில் உயர்கல்வி படித்தோர் சதவீதம் 2011-ம் ஆண்டு 32 சதவீதமாக இருந்தது. முதல்வர் ஜெயலலிதா காலத்தில் ஏராளமான கல்வி திட்டங்களை தீட்டினார். அவரது வழியில் நாங்களும் கல்விக்கு பல திட்டங்கள் தீட்டி தற்போது தமிழகத்தில் உயர்கல்வி பெற்றோர் சதவீதம் 48,6 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் இந்த அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. மேலும் பலதிட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.
இவ்வாறு முதல-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
விழாவில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், அன்பழகன், தங்கமணி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தோப்பு வெங்கடாச்சலம், கே.விராமலிங்கம், கே.எஸ். தென்னரசு, ராஜாகிருஷ்ணன், சிவசுப்பிரமணி, ஈஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு அருகே உள்ள ரகுபதி நாயக்கன்பாளையம் ரெயின்போ காலனியைச் சேர்ந்தவர் சண்முகராஜா (வயது 42) இவரது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஆகும்.
ரகுபதிநாயக்கன் பாளையத்தில் அவர் கெமிக்கல் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி பெயர் முத்துலட்சுமி (35) அஸ்வினி(19),அட்சயா(10) என்ற 2 மகள்கள் உள்ளனர். இவர்களுடன் சண்முக ராஜாவின்தங்கை மகள் வெற்றி (19) என்பவரும் அங்குதங்கி கல்லூரியில் படித்து வருகிறார்.
நேற்று இரவு வீட்டில் இருந்த 5 பேரும் உள்ரூமில் படுத்து தூங்கினர். அந்த அறையில் ஏ.சி. ஓடிக் கொண்டிருந்தது. நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் வீட்டு கதவை நைசாக உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர்.
பிறகு வீட்டில் இருந்த பீரோவையயும் திறந்தனர். உள்ளே சண்முகராஜா தனது மகளின் திருமணத்துக்காக வாங்கி வைத்திருந்த 62 பவுன் நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்தனர். மேலும் பீரோவில் இருந்த19 ஆயிரம் பணத்தையும் எடுத்தனர்.
பிறகு கொள்ளையர்கள் தங்கள் வந்த காரியம் முடிந்ததும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். 2-க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் இந்த கைவரிசையில் ஈடுபட்டிருக்ககூடும் என தெரிகிறது.
அதிகாலை 4 மணியளவில் அவரது இளைய மகள் அட்சயா தண்ணீர்குடிக்க வந்தபோது கதவும், பீரோவும் திறந்து கிடந்ததை கண்டு சத்தம் போட்டார். அதன்பிறகுதான் வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.
இதுபற்றி தகவல கிடைத்ததும் கொள்ளை நடந்த வீட்டுமுன் அப்பகுதி மக்கள் திரண்டனர். இதுகுறித்து ஈரோடு தாலூகா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் போலீஸ் மோப்ப நாய் வைதேகி வரவழைக்கப்பட்டது. அந்த நாய் வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தப்படி வெளியே வந்து பூந்துறை ரோட்டில் சிறிதுதூரம் ஓடி நின்று விட்டது. மேலும் கைரேகை நிபுணர்களும் கொள்ளையர்களின் கைரேகையினை பதிவு செய்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொள்ளையர்கள் வீட்டு கதவை உடைக்க முயன்ற போது இதை கண்ட ஒரு தெரு நாய் அங்கு ஓடி வந்தது. இந்த தெரு நாய்க்கு சண்முகராஜா வீட்டில் உள்ளவர்கள் சாப்பாடு போடுவார்கள்.
இந்த விஸ்வாசத்தில் அந்த நாய் கொள்ளையர்களை பார்த்து குரைத்தது.
இதை கண்ட ஒரு கொள்ளையன் அந்த நாயை கத்தியால் குத்தி உள்ளான். இதில் அந்த நாய் காயம் அடைந்தது. ஆனால் உயிர் தப்பித்து விட்டது.
அரசு போக்குவரத்து கழக ஈரோடு மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் இன்று ஒரே சமயத்தில் பயணிகளிடம் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
விழிப்புணர்வு நிகழ்ச்சியாக ஈரோடு மண்டல போக்குவரத்து பொது மேலாளர் மகேந்திரகுமார், வணிக மேலாளர் நாகேந்திரன் மேற்பார்வையில் ஒரே சமயத்தில் பஸ்களில் சோதனை நடத்தப்பட்டது.
பஸ்களில் பயணிகள் முறைப்படி பயணச்சீட்டு வாங்கி பயணிக்கிறார்களா? என இந்த சோதனை நடத்தப்பட்டது.
மொத்தம் மண்டலத்துக்குட்பட்ட பகுதியில் 88 செக்கிங் இன்ஸ்பெக்டர்கள் இந்த சோதனையில் ஈடுப்பட்டனர். ஈரோடு பஸ் நிலையத்திலும் இந்த சோதனை நடத்தப்பட்டது.
இதில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த 88 பேர் பிடிப்பட்டனர்.அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தம் ரூ.7500 அபராதம் வசூலானது.
ஈரோடு:
ஈரோடு அருகே உள்ள ரகுபதி நாயக்கன் பாளையம் ரெயின்போ காலனியைச் சேர்ந்தவர் சண்முகராஜா (வயது 42) இவரது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஆகும்.
ரகுபதிநாயக்கன் பாளையத்தில் அவர் கெமிக்கல் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி பெயர் முத்துலட்சுமி (35) அஸ்வினி(19),அட்சயா(10) என்ற 2 மகள்கள் உள்ளனர். இவர்களுடன் சண்முக ராஜாவின்தங்கை மகள் வெற்றி (19) என்பவரும் அங்குதங்கி கல்லூரியில் படித்து வருகிறார்.
நேற்று இரவு வீட்டில் இருந்த 5 பேரும் உள்ரூமில் படுத்து தூங்கினர். அந்த அறையில் ஏ.சி. ஓடிக் கொண்டிருந்தது. நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் வீட்டு கதவை நைசாக உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர்.
பிறகு வீட்டில் இருந்த பீரோவையயும் திறந்தனர். உள்ளே சண்முகராஜா தனது மகளின் திருமணத்துக்காக வாங்கி வைத்திருந்த62 பவுன் நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்தனர். மேலும் பீரோவில் இருந்த19 ஆயிரம் பணத்தையும் எடுத்தனர்.
பிறகு கொள்ளையர்கள் தங்கள் வந்த காரியம் முடிந்ததும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். 2-க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் இந்த கைவரிசையில் ஈடுபட்டிருக்ககூடும் என தெரிகிறது.
அதிகாலை 4 மணியளவில் அவரது இளைய மகள் அட்சயா தண்ணீர்குடிக்க வந்தபோது கதவும், பீரோவும் திறந்து கிடந்ததை கண்டு சத்தம் போட்டார். அதன்பிறகுதான் வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.
இதுபற்றி தகவல கிடைத்ததும் கொள்ளை நடந்த வீட்டுமுன் அப்பகுதி மக்கள் திரண்டனர். இதுகுறித்து ஈரோடு தாலூகா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் போலீஸ் மோப்ப நாய் வைதேகி வரவழைக்கப்பட்டது. அந்த நாய் வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தப்படி வெளியே வந்து பூந்துறை ரோட்டில் சிறிதுதூரம் ஓடி நின்று விட்டது. மேலும் கைரேகை நிபுணர்களும் கொள்ளையர்களின் கைரேகையினை பதிவு செய்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொள்ளையர்கள் வீட்டு கதவை உடைக்க முயன்ற போது இதை கண்ட ஒரு தெரு நாய் அங்கு ஓடி வந்தது. இந்த தெரு நாய்க்கு சண்முக ராஜா வீட்டில் உள்ளவர்கள் சாப்பாடு போடுவார்கள்.
இந்த விஸ்வாசத்தில் அந்த நாய் கொள்ளையர்களை பார்த்து குரைத்தது.
இதை கண்ட ஒரு கொள்ளையன் அந்த நாயை கத்தியால் குத்தி உள்ளான். இதில் அந்த நாய் காயம் அடைந்தது. ஆனால் உயிர் தப்பித்து விட்டது.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி பகுதியில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பல்வேறு அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
அப்போது அமைச்சர் கே.சி.கருப்பணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
உள்ளாட்சி தேர்தலை நடத்த தயங்குகிறார்கள் என்கிறார்கள். நாங்கள் தயங்கவும் இல்லை. பயப்படவும் இல்லை. உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கேட்டு தி.மு.க. வழக்கு தொடர்ந்துள்ளது. அதை அவர்களை திரும்ப பெறச் சொல்லுங்கள் வரும் டிசம்பர் மாதம் தேர்தலை நடத்த இந்த அரசு தயாராக உள்ளது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பொய் பேசுவதற்காகவே வாய் திறக்கிறார். பாராளுமன்ற தேர்தலில் கூட இப்படி பொய்யான வாக்குறுதிகளை கூறி 38 எம்.பிக்களை பெற்று உள்ளார்.
ஆனால் இந்த 38 எம்.பி.க்களை பெற்று என்ன பிரயோஜனம்? 38 பைசாவுக்கு கூட பயன் இல்லை.
மு.க.ஸ்டாலின் எப்படியும் முதல் அமைச்சர் ஆகிவிடலாம் என கணவு கண்டு கொண்டிருக்கிறார். ஆனால் அவரது கனவு கனவாகத்தான் இருக்கும் ஒரு போதும் தி.மு.க. ஆட்சிக்கு வர வாய்ப்பே கிடையாது. மக்கள் அந்த வாய்ப்பை கொடுக்கவும் மாட்டார்கள்.
பால் விலை உயர்வு பற்றி முதல்-அமைச்சர் எடுத்த நடவடிக்கை மிகவும் சரியான நடவடிக்கை தான்.
ஊட்டியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களால் தான் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளதாக கூறுவது சரியில்லை. அங்கு அனுமதியின்றி கட்டிடங்கள் ஏதும் கட்டப்படவில்லை.
இவ்வாறு அமைச்சர் கருப்பணன் கூறினார்.
ஈரோடு கருங்கல்பாளையம் வாய்க்கால்கரை, வெற்றி நகரைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் நேற்று மாலை நடுமேடு பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றனர். அங்கு சாமியைக் கும்பிட்டு பொங்கல் வைத்தனர்.
பொங்கல் வைக்கும் அருகே மரம் தேன் கூடு ஒன்று இருந்தது. அதில் தேனீக்கள் கூடு கட்டியிருந்தன. இந்நிலையில் பொங்கல் வைக்கும்போது ஏற்பட்ட புகை மூட்டம் காரணமாக மரத்திலிருந்த தேனீக்கள் அந்த கும்பலை விரட்டி விரட்டி கொட்டியது.
இதில் பிரியா(வயது 24) , ராஜபூபதி(வயது 23), லட்சுமணன்(வயது 58), பாலாஜி (வயது 30), குழந்தைஅம்மாள்(வயது 80), இரண்டரை வயது குழந்தை உள்பட 12 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை குழந்தை அம்மாள் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய அணை பவானி சாகர் அணை
ஆசியா கண்டத்திலேயே மண்ணால் உருவான 2-வது மண் அணை என்ற பெருமை இந்த பவானி சாகர் அணைக்கு உண்டு.
இந்த அணை கடந்த 1948-ம் ஆண்டு கட்டுமான பணி தொடங்கப்பட்டு 1954-ல் கட்டி முடிக்கப்பட்டது. 120 அடி உயரம் கொண்ட இந்த அணையில் தற்போது 15 அடிக்கு சேறும் சகதியும் உள்ளது. 105 அடி வரை நீரை தேக்கி வைக்கலாம்.
சுற்றிலும் பசுமையான மலைகள் இந்த மலையின் இடையே, மாயாறு மூலமும், நீலகிரி மலை பகுதியில் பெய்யும் மழை நீர் பவானி ஆற்றில் பாய்ந்து மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியாக பவானி சாகர் அணைக்கு வந்து சேருகிறது.
இப்படி பிரதான 2 வழிகள் மூலம் பவானி சாகர் அணைக்கு வந்து செல்கிறது.

கடந்த 2018-ம் ஆண்டு 12 ஆண்டுகளுக்கு பிறகு பவானி சாகர் அணை முழு கொள்ளளவை எட்டியது. இப்போது தென்மேற்கு பருவமழையால் அணைக்கு நீர்வரத்து கணிசமாக வந்து அணைகளில் நீர் மட்டமும் 94.57 அடியாக உள்ளது. தற்போது பாசனத்துக்காக வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. விவசாயிகள் விவசாய பணிகளையம் மகிழ்ச்சியுடன் தொடங்கி உள்ளனர்.
பவானிசாகர் அணை கட்டப்பட்டு 65-வது ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி ஈரோடு மாவட்ட விவசாயிகள் பலர் அணையோரம் உள்ள நீர் தேக்கப்பகுதிகளுக்கு சென்று பூஜை செய்து வழிபட்டு வருகிறார்கள்.
ஒரு சில விவசாயிகள் அன்னதானமும் வழங்கினர்
ஈரோடு:
கொ.ம.தே.க. பொதுச் செயலாளர் ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:-
அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஈஸ்வரன் 100 ஏக்கர் நிலம் ஒதுக்கி தந்தால் ஈரோடு மாவட்டத்தை பிரித்து கோபியை தனி மாவட்டம் ஆக்க நான் கோரிக்கை வைக்கிறேன் என்று கூறி உள்ளார்.
இதிலிருந்து ஈரோடு மாவட்டத்தை 2-ஆக பிரிக்க அவருக்கும் இங்குள்ள எம்.எல்.ஏ.க்களுக்கும் விருப்பம் இருப்பதாகவே தெரிகிறது.
கோவை, ஈரோடு சேலம் ஆகிய பெரிய மாவட்டங்களை பிரிப்பதன் மூலம் வளர்ச்சித் திட்டங்களை வேகப்படுத்த முடியும். கோபியை தனி மாவட்டமாக பிரித்தால் கோபியை சுற்றி உள்ள மக்கள் வளர்ச்சி பெறும் வாய்ப்பு உள்ளது.
தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களை பிரித்துக்கொண்டு இருக்கிறார்களே அங்கெல்லாம் 100 ஏக்கர் நிலம் பெற்றுக் கொண்டு தான் பிரித்தார்களா?

இப்போது வேலூரை 3 ஆக பிரித்தார்களே அங்கு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 100 ஏக்கர் நிலம் கொடுத்த 3 தர்ம பிரபுகள் கொடையாளிகள் யார் என்று அமைச்சர் செங்கோட்டையனால் சொல்ல முடியுமா?
ஒரு மாவட்டத்தை பிரிப்பதற்கும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கும் 100 ஏக்கர் நிலம் எதற்கு? அமைச்சர் விளக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.
கோபியில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. 15 லட்சத்து 75 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் பணி விரைவில் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு முதல் மாணவர்களுக்கு ஷூ வழங்கப்படும்.

100 அரசு பள்ளிக் கூடங்களில் தலா ரூ.2.50 கோடி செலவில் அவுட்டோர் ஸ்டேடியம் மத்திய அரசு அனுமதியுடன் அமைக்கப்படும். கோபியை தலைநகரமாகக் கொண்டு மாவட்டம் உருவாக்க வேண்டும் என சிலர் பேசி வருகிறார்கள். நான் கோபியைச் சேர்ந்தவன். எனக்கு கோபியை தலைநகரமாகக் கொண்டு ஒரு மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை உண்டு.
ஆனால், அதை அமைப்பதற்கு 100 ஏக்கர் நிலம் தேவை. எல்லா மாவட்டத்தையும் பிரிப்பது தான்அரசின் நோக்கமாக உள்ளது. மாணவர்கள் 18 வயது நிரம்பினால்தான் வாகனம் ஓட்ட வேண்டும் என மோட்டார் வாகன சட்டம் உள்ளது. வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது போன்ற விதிமுறைகளும் உள்ளன. இதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு மற்றும் காசிபாளையம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடக்கிறது. இதையொட்டி நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
ஈரோடு நகர் முழுவதும், இடையங்காட்டு வலசு, முனிசிபல் காலனி, டீச்சர்ஸ் காலனி, பெருந்துறை ரோடு, சம்பத் நகர், வெட்டுக்காட்டு வலசு, மாணிக்கம் பாளையம், ஆண்டிகாடு, பாணிடியன் நகர், சக்தி நகர், வக்கீல் தோட்டம், பெரிய சேமூர், ராம் நகர், பழைய பாளையம், பெரிய வலசு, கருங்கல்பாளையம், நாயண வலசு, குமலன் குட்டை, டவர் லைன் காலனி, திருமால் நகர், அசோகபுரம், வைராபாளையம், மூலப் பட்டறை, பெரியார் நகர், சத்தி ரோடு, கே.என்.கே. ரோடு, நேதாஜி ரோடு, காந்தி ஜி ரோடு, ஈ.வி.என். ரோடு, மேட்டூர் ரோடு.
மேலும் சூரம்பட்டி வலசு, கே.கே.நகர், சென்னிமலை ரோடு, இண்டஸ்டிரியல் எஸ்டேட், காசிபாளையம், சாஸ்திரி நகர், குமரன் நகர், ஜீவா நகர், மூலப்பாளையம், நாடார் மேடு, கொல்லம் பாளையம், பச்சப்பாளி, செந்தில் நகர், முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட் பி.எச்.1,2,3, அம்பிகை நகர், அன்னை நகர், நல்லியம் பாளையம், பழைய ரெயில் நிலையம் பகுதி.
இந்த தகவலை ஈரோடு நகரியம் கோட்ட செயற்பொறியாளர் பழனிவேல் தெரிவித்துள்ளார்.
பெருந்துறை அடுத்த திங்களூர் அருகே உள்ள சாஸ்திரி தோட்டம் பெரியவீரசங்கிலி பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 72). தனது மகனுடன் வசித்து வந்தார்.
சம்பவத்தன்று பொன்னுசாமி மாட்டுத் தொழுவத்தில் உள்ள மாடுகளை அவிழ்த்து கட்டி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாம்பு ஒன்று எதிர்பாராவிதமாக பொன்னுசாமியை கடித்து விட்டது.
இதுகுறித்து அவர் தனது மகனிடம் தெரிவித்தார்.
உடனே பொன்னுச்சாமியை மீட்டு பெருந்துறையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி பொன்னுசாமி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து திங்கலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






