search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திறப்பு விழா காணாமல் பயன்பாட்டிற்கு வந்த ஏரியூர் பேருந்து நிலையம்
    X

    ஏரியூர் பேருந்து நிலையத்தை படத்தில் காணலாம்.

    திறப்பு விழா காணாமல் பயன்பாட்டிற்கு வந்த ஏரியூர் பேருந்து நிலையம்

    • பணிகள் முழுமை பெற்று திறப்பு விழாவிற்காக பேருந்து நிலையம் காத்திருந்தது.
    • திறப்பு விழா காணாமலே ஏரியூர் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம், ஏரியூர் பகுதியில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். ஏரியூர் பகுதி அடர்ந்த மலைகள் சூழ்ந்த பகுதி என்பதால் பல்வேறு கிராமங்களை கொண்டதால், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நிர்வாக காரணங்களுக்காக பென்னாகரம் ஒன்றியத்தில் இருந்து ஏரியூர் ஒன்றியம் தனியாக பிரிக்கப்பட்டது.

    பென்னாகரத்திற்கு அடுத்தபடியாக அதிக பரப்பளவை கொண்டதாகவும், சேலம் மாவட்டத்தை இணைக்க கூடிய பகுதியாக கொண்ட ஏரியூர் பகுதிக்கு போதுமான பேருந்து நிறுத்துமிடம் இல்லாததால் பெண்ணாகரம் ஏரியூர் சாலையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டு வந்தன. இதனால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

    இதனை தவிர்க்கும் வகையில் ஏரியூர் பகுதிக்கென கடந்த 2020-ம் ஆண்டு ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் பேருந்து நிலைய பணிகள் தொடங்கி, அந்தப் பணிகள் முழுமை பெற்று திறப்பு விழாவிற்காக பேருந்து நிலையம் காத்திருந்தது.

    இந்நிலையில் பேருந்து நிலையம் அமைய உள்ள இடமானது தனிநபர் தானமாக வழங்கிய இடம் எனவும்,பேருந்து நிலையத்திற்காக ஒரு ஏக்கர் நிலம் அரசுக்கு தானமாக வழங்கிய போதிலும் வழங்கிய அளவை விட அதிகப்படியான இடத்தை கையகப்படுத்தியதாகவும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    விசாரணையில் அதிகபடியான இடம் அரசு எடுத்துள்ளது உறுதியானதையடுத்து, பேருந்து நிலைய பணியை நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக 90 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில், ஏரியூர் பேருந்து நிலைய கட்டுமான பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    பணிகள் நிறுத்தப்பட்டதால் பேருந்து நிலையத்தில் சரக்கு வாகனங்களும், வாடகை வாகனங்களும் நிறுத்தப்பட்டு வந்தது. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம் போல் பென்னாகரம் சாலையில் நிறுத்தப்பட்டு வந்த நிலையில் ஏரியூர் பகுதியில் இருந்து சேலம் மாவட்டத்திற்கு செல்லும் அரசு பேருந்துகள் இடமில்லாததால் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டன.

    விரைவில் ஏரியூர் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வரும் என அப்பகுதி மக்கள் காத்திருந்த நிலையில் அரசின் சார்பில் திறப்பு விழா காண்பதற்கு முன்பே அரசுப் பேருந்துகள், புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்திற்குள் நிறுத்தி, அங்கிருந்து ஏரியூர் பகுதியில் இருந்து பென்னாகரம், சேலம், நாகமரை என பல்வேறு பகுதிகளுக்கு பயணிகள் செல்லுகின்றனர்.

    நீதிமன்ற உத்தரவால் பணிகள் நிறுத்தப்பட்டும், அரசின் சார்பில் திறப்பு விழா காணாமலே ஏரியூர் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    Next Story
    ×