என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை 1.5 கோடி தொண்டர்கள் சார்பில் வரவேற்கிறேன் - எடப்பாடி பழனிசாமி
- அ.தி.மு.க.வில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
- என்னோடு துணை நின்ற அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என இ.பி.எஸ். தெரிவித்துள்ளார்.
சென்னை:
ஜூலை 11-ம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்கிறோம் என சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை 1.5 கோடி தொண்டர்கள் சார்பாக வரவேற்கிறேன்.
நீதி, நேர்மை, நாணயத்தை நம்பி கழகத் தொண்டர்களின் முழு ஆதரவுடன் போராடி வருகிறோம். இன்றைய தினம் தர்மம், நீதி வென்றுள்ளது.
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், அறிவிப்புகள், முடிவுகளும் செல்லும் என்ற தீர்ப்பை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.
இந்த சட்டப் போராட்டத்தில் என்னோடு துணை நின்ற தலைமைக் கழக நிர்வாகிகள் உள்பட அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.