என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தி.மு.க. பிரமுகர் மீது எஸ்.பி.யிடம் புகார்
  X

  மனு கொடுக்க வந்த செல்வராஜ் மற்றும் அவரது தாயார் சின்ன பொண்ணு.

  தி.மு.க. பிரமுகர் மீது எஸ்.பி.யிடம் புகார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கொலை வழக்கில் சாட்சிக்கு மிரட்டல் விடுத்த தி.மு.க. பிரமுகர் மீது எஸ்.பி.யிடம் செல்வராஜ் மற்றும் அவரது தாயார் பாதுகாப்பு கேட்டு புகார்ம னு கொடுத்தனர்.
  • செந்தில்குமார் கொலை வழக்கு சேலம் 2-வது கூடுதல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகின்ற நிலையில் படுகொலை

  சேலம்:

  சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த அத்தனூர்பட்டி காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் சேட்டு என்கிற செல்வராஜ். இவரது தம்பி செந்தில்குமார் கடந்த 2015-ம் ஆண்டு வாழப்பாடி பகுதியில் தி.மு.க. பிரமுகர் பாண்டியன் உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

  இந்த கொலை வழக்கில் கைதான 7 பேரும் தற்போது ஜாமினில் வெளியே உள்ளனர். இந்த நிலையில் செந்தில்குமார் கொலை வழக்கு சேலம் 2-வது கூடுதல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகின்ற நிலையில் படுகொலை செய்யப்பட்ட செந்தில்குமாரின் அண்ணன் செல்வராஜ் சாட்சியாக உள்ளதால் அவரை நீதி–மன்றத்தில் சாட்சி கூறக்கூடாது என்றும் வேறு விதமாக சாட்சியை மாற்றி கூற வேண்டும் என்றும், மீறினால் குடும்பத்துடன் கொலை செய்து விடுவேன் என்று பாண்டியன் விடுத்ததாக கூறப்படுகிறது.

  இதையடுத்து செல்வராஜ் மற்றும் அவரது தாயார் சின்ன பொண்ணு ஆகிய இருவரும் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு வழங்க கோரி மனு கொடுத்தனர்.

  Next Story
  ×