என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  குமாரபாளையம் வெள்ள பாதிப்புகளை ஒரே நேரத்தில் பார்வையிட வந்த தி.மு.க.-அ.தி.மு.க.வினர்
  X

  குமாரபாளையம் வெள்ள பாதிப்புகளை ஒரே நேரத்தில் பார்வையிட வந்த தி.மு.க.-அ.தி.மு.க.வினர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • குமாரபாளையம் வெள்ள பாதிப்புகளை சேலம்- கோவை புறவழிச்சாலை கத்தேரி பிரிவில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க,வினர் ஒரே நேரத்தில் திரண்டனர்.
  • ஆதரவாளர்கள் திரண்டதால் போக்குவரத்து பாதிப்பு

  குமாரபாளையம்:

  குமாரபாளையத்தில் காவிரி வெள்ள பாதிப்புகள் பார்வையிட்டு நலத்திட்ட உதவிகள் செய்ய தி.மு.க. அமைச்சர்கள் கே.என். நேரு மற்றும் மதிவேந்தனும், முன்னாள் முதல்-அமைச்சர், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் வந்தனர்.

  இரு தரப்பினரும் தங்கள் தலைவர்களை வரவேற்க சேலம்- கோவை புறவழிச்சாலை கத்தேரி பிரிவில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க,வினர் ஒரே நேரத்தில் திரண்டனர்.

  அப்போது சாலையின் நடுவே அவர்கள் நின்று கொண்டிருந்ததால் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. இத னால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

  இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரும், போக்குவரத்து போலீசாரும் சேர்ந்து போக்குவரத்து நெரிசலை சீர்படுத்தினர். அதன்பிறகு புறவழிசாலையில் வாகனங்கள் சீராக சென்றன.

  Next Story
  ×