search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் தே.மு.தி.க. கண்டன ஆர்ப்பாட்டம்
    X

    தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் தயாளலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தே.மு.தி.க.வினர்.

    தூத்துக்குடியில் தே.மு.தி.க. கண்டன ஆர்ப்பாட்டம்

    • தூத்துக்குடி மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் டல்லஸ் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
    • மின் கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற்று அனைத்து மக்களுக்கும் மின்சாரத்தை தடையின்றி வழங்கவேண்டும்.

    தூத்துக்குடி:

    மத்திய அரசு அரிசிக்கு விதித்துள்ள 5சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிப்பினை கண்டித்தும், இதனை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும், தமிழக அரசு தற்போது உயர்த்தியுள்ள வீட்டுவரி, சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வினை கண்டித்தும், இவற்றை தமிழக அரசு உடனடியாக திரும்பபெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தூத்துக்குடி மாநகர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தூத்துக்குடி மாநகர் மாவட்ட பொறுப்பாளர் தயாளலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் விஜயன், அலெக் ஸாண்டர், ராஜபொம்மு, பரமசிவம், ராஜாமுகமது, செல்வம், சக்திவேல், துரை, அக்பர் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில், தூத்துக்குடி மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் டல்லஸ் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.ஆர்ப்பாட்டத்தில், தூத்துக்குடி மாநகர் மாவட்ட பொறுப்பாளர் தயாளலிங்கம் பேசியதாவது:-

    தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை எதையும் நிறைவேற்றாமல் ஆளும் அரசான தி.மு.க. அரசும் மத்திய அரசு போன்று தமிழக மக்களை மிகவும் வஞ்சித்து வருகிறது. பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை, சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம், நீட் தேர்வு ரத்து என சொன்னதை செய்யாமல், வீட்டுவரி, சொத்து வரி என்ற ரீதியில் மின்சார கட்டணத்தை உயர்த்தி யுள்ளது கொடுமையிலும் கொடுமையாகும்.

    மக்களை வஞ்சித்துவரும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து இந்த மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்டுள்ள ஜி.எஸ்.டி.வரி விதிப்பை மத்திய அரசு உடனடியாக திரும்பபெறவேண்டும்.

    மின் கட்டண உயர்வை தமிழக அரசும் உடனடியாக திரும்ப பெற்று அனைத்து மக்களுக்கும் மின்சாரத்தை தடையின்றி வழங்கவேண்டும். இல்லாதபட்சத்தில் மக்களுக்கு ஆதரவான எங்களின் போராட்டங்கள் தொடரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்றவர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதில், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், அதிசயராஜ், சண்முகம், பகுதி செயலாளர்கள் சின்னதுரை, நாராயண மூர்த்தி, சம்சூதீன், பேச்சிமுத்து, ராஜாமுகமது, அரசமுத்து, தோப்புஅரசமுத்து, பகுதி நிர்வாகிகள் தங்கமுத்து, ஆறுமுகம், அனவர்தனன், சுரேஷ், நாகராஜ், வட்ட செயலாளர்கள் வல்லரசு துரை, சுப்பு, இருளப்பசாமி, மாரியப்பன், பொய்யாழி, மகேந்திரன், பால்ராஜ் , கண்ணன், சேக்காஷிம், பிரபு, ஆனந்த கிருஷ்ணன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, மாநகர நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×