என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மாநகராட்சிக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலம் கண்டுபிடிப்பு- மேயர் தகவல்
  X

  மேயர் சண்.ராமநாதன் ஆய்வு மேற்கொண்டார்.

  மாநகராட்சிக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலம் கண்டுபிடிப்பு- மேயர் தகவல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
  • அனைத்து கோரிக்கைகளும் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

  தஞ்சாவூர்:

  தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் தினமும் ஒவ்வொரு வார்டாக சென்று ஆய்வு நடத்தி பொதுமக்களிடம் குறைகளை கேட்டு வருகிறார்.

  அந்த வகையில் இன்று காலை தஞ்சை மாநகராட்சி 42-வது வார்டுக்கு உட்பட்ட கண்ணன் நகர், டி. பி. எஸ். நகர், திரிபுர சுந்தரி நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தார். பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள பூங்காவை ஆய்வு செய்து அதில் அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

  அப்போது அவர் நிருபர்க ளுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

  இன்று 42-வது வார்டுக்கு உட்பட்ட இடங்களில் ஆய்வு செய்தேன். புதிதாக சாலை அமைத்தல், பாதாள சாக்கடை இணைப்பு கொடுத்தல், மின்விளக்கு அமைக்க வேண்டும், பூங்கா அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கூறியுள்ளனர்.

  அனைத்து கோரிக்கைகளும் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும். மகரிஷி பள்ளி செல்லும் சாலையானது 80 அடி அகலத்துக்கு இரு வழி சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

  டி.பி.எஸ். நகர் 3-வது தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலம் ஆய்வின் போது கண்டறியப்பட்டுள்ளது. அந்த இடத்தில் புதிதாக மாநகராட்சி ஆணையர் குடியிருப்பு உள்ளிட்ட சில கட்டிடங்கள் கட்ட ஆணையருடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  இந்த ஆய்வின் போது 42-வது வார்டு கவுன்சிலர் கலைவாணி சிவகுமார், இன்ஜினியர் ரமேஷ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

  Next Story
  ×