என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
முல்லைபெரியாற்றில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட 37 குழாய் இணைப்பு துண்டிப்பு
- கடந்த சில மாதங்களாக அனுமதியின்றி குழாய் இணைப்புகள் உள்ளதாக புகார் உள்ளது.
- அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்டு 37 குழாய் இணைப்புகளை பொக்லைன்மூலம் நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டத்தில் லோயர்கேம்ப், கூடலூர், கம்பம், க.புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம், சின்னமனூர், சீலையம்பட்டி, கோட்டூர், பழனிசெட்டிபட்டி வரை கம்பம் பள்ளத்தாக்கு பகுதியாகும். இப்பகுதியில் 14707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.
இங்கு கடந்த சில மாதங்களாக அனுமதியின்றி குழாய் இணைப்புகள் உள்ளதாக புகார் உள்ளது. சின்னமனூர் முத்துலாபுரம் விலக்கில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பாலம் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட 30 -க்கும் மேற்பட்ட குழாய்இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
நவீன எந்திரங்கள் கொண்டு இரவோடு இரவாக பாலத்தின் கீழ் பகுதியில் துளையிட்டு துண்டிக்கப்பட்ட குழாய் இணைக்கப்பட்டு மீண்டும் தண்ணீர் கொண்டுசெல்லப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதனைதொடர்ந்து சின்னமனூர் டி.எஸ்.பி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முல்லைபெரியாற்றில் இருந்து அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்டு 37 குழாய் இணைப்புகளை பொக்லைன்மூலம் நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர்.
அப்போது ஏராளமான விவசாயிகள் அங்கு குவிந்தனர். அவர்களிடம் உரிய அனுமதிபெற்று தண்ணீர் கொண்டுசெல்ல வேண்டும் என போலீசார் சமரசம் செய்தனர். ேமலும் அப்பகுதியில் உள்ள அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட குடிநீர் குழாய்களை துண்டிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பல லட்சம் செலவு செய்து வாழை, தென்னை, திராட்சை ஆகியவற்றை விவசாயம் செய்துள்ளனர்.தற்போது குழாய்கள் துண்டிக்கப்பட்டதால் அவை பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடபோவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.