திண்டுக்கல் அருகே கொத்தனாரை அரிவாளால் வெட்டிய டிரைவர் கைது

திண்டுக்கல் அருகே கொத்தனாரை அரிவாளால் வெட்டிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் அருகே கொத்தனாரை அரிவாளால் வெட்டிய டிரைவர் கைது
Published on

தாடிக்கொம்பு:

திண்டுக்கல் அருகில் உள்ள மேற்கு மீனாட்சி நாயக்கன்பட்டியை சேர்ந்த முத்துராஜ் மகன் சரத்குமார் (வயது25). மினி வேன் டிரைவராக உள்ளார். இவரது வைக்கோல் போருக்கு மர்ம நபர்கள் சம்பவத்தன்று தீ வைத்து சென்றனர்.

இவரது வீட்டிற்கு எதிரில் பழனியப்பன் மகன் மணிராஜன் (28) என்பவர் வசித்து வருகிறார். கொத்தனார் வேலை பார்க்கும் இவர்தான் தனது வைக்கோல் போருக்கு தீ வைத்ததாக சரத்குமார் சந்தேகப்பட்டார். இதனால் கடந்த 2 நாட்களாக குடிபோதையில் அவரிடம் தகராறு செய்து வந்தார்.

இதனால் நேற்று மணிராஜனை அரிவாளால் சரத்குமார் வெட்டினார். படுகாயம் அடைந்த அவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து சரத்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com