என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  3 வயது மகனுடன் சாலையைக் கடந்த சர்வீஸ் ஸ்டேஷன் தொழிலாளி கார் மோதி பலி
  X

  3 வயது மகனுடன் சாலையைக் கடந்த சர்வீஸ் ஸ்டேஷன் தொழிலாளி கார் மோதி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நாமக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலையை நடந்து சென்று கடக்க முயன்றனர்.
  • நாமக்கல் நோக்கி சென்ற கார் ஒன்று மணிகண்டன் மற்றும் நித்தீஷ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.

  பரமத்தி வேலூர்:

  நாமக்கல் மாவட்டம், கொசவம்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் மணிகண்டன் ( வயது 29). இவர் புலவர்பாளையம் அருகே உள்ள சர்வீஸ் ஸ்டேசனில் வேலைபார்த்து வந்துள்ளார். இவரது மனைவி சுசீலா (24). இவர்களுக்கு துர்காதேவி (7),நித்தீஷ் (3) மற்றும் உஷா (2) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.

  நேற்று மணிகண்டனும்,3 வயது மகன் நித்தீஷும் புலவர்பாளையத்தில் நாமக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலையை நடந்து சென்று கடக்க முயன்றனர். அப்போது பரமத்தியில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற கார் ஒன்று மணிகண்டன் மற்றும் நித்தீஷ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் படுகாயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவம னையில் சேர்த்தனர்.

  மணிகண்டனை பரிசோ தனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த குழந்தை நித்தீசுக்கு தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்பட்டுவிட்டு நிற்காமல் சென்ற காரை தேடி வருகின்றனர்.

  Next Story
  ×